காவேரி மருத்துவமனையில் கருணாநிதி! 4வது நாளாக சிகிச்சை!
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு நான்காவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு நான்காவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில நாட்களாக மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ம் தேதி இரவு அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், கனிமொழி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தடைந்தனர். பின்னர் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர். தற்போது கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரம் தெரிவித்து உள்ளது. இருப்பினும் டாக்டர்களின் 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் கருணாநிதி தொடர்ந்து இருந்து வருகிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிய தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
> கலைஞர் கருணாநிதி விரைவில் நலம் பெறுவார் - இலங்கை ஜனாதிபதி!
> கருணாநிதியின் உடல்நிலையை விசாரித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்!
> கருணாநிதி எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் -வைகோ!
> கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது -முதல்வர் பழனிசாமி!
> கலைஞரை காண சென்னை வந்தடைந்தார் குடியரசு துணை தலைவர்!
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை பற்றி நேற்று மாலை மருத்துவ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. அந்த வகையில் இன்று அறிக்கை வெளியிடப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.