திமுக தலைவர் கருணாநிதி கடந்த நவம்பர் மாதம் ஒவ்வாமையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் டிசம்பர் மாதம் சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பூரண குணம் அடைந்து வீட்டிற்கு திரும்பிய அவரை ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர். 
 
இந்நிலையில் ஜூன் 3-ம் தேதி அவரது 94-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. மிக பிரம்மாண்டமாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ள இந்த விழா சென்னை, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இவ்விழாவில் திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளதாகவும், இவ்விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்த கொள்ள உள்ளதாகவும் திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.,யுமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.


பல மாதங்களுக்கு பிறகு தற்போது கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளார். கருணாநிதியின் வைரவிழாவில் கலந்து கொள்ள பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து திமுக எம்.பி., கனிமொழி நேரில் அழைப்பு விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.