சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீடு குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.  தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு ஆய்வறிக்கையை ஏற்று மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.  தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினின் தந்தையும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ம் தேதி மரணம் அடைந்தார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்நிலையில் கலைஞருக்கு சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க திமுக அரசு திட்டமிட்டது.  ரூபாய் 81 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள இந்த பேனா சிலைக்காக கடலில் நடுவே 8551 சதுர மீட்டர் இடம் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயர் வைக்கப்பட உள்ளது. பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்கு முதற்கட்ட அனுமதி அளித்து இருந்தது.  இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் நடைபெற்றது.  பின்பு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிடம் தமிழக பொதுப்பணித்துறை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.  



மேலும் படிக்க | நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? கமல்ஹாசன் ஆலோசனை


 


இந்நிலையில் தற்போது இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  ஆனால் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது.  கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்கு உட்பட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் உள்பட 15 நிபந்தனைகளையும் விதித்துள்ளது.  இருப்பினும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை அடுத்த திமுக மற்றும் தமிழக அரசு மகிழ்ச்சியில் உள்ளது.  


சமீபத்தில் மதுரையை சேர்ந்த தி.மு.க நிர்வாகி தனது புதிய இல்லத்தில்., பேனா நினைவு சின்னத்தை நிறுவியுள்ளார். மதுரையில் தி.மு.க., தொண்டர் நாகேந்திரன் என்பவர் தான் கட்டிய புதுமனையில் 5 அடியில் 30 ஆயிரம் செலவில் பிரமாண்ட பேனா சின்னத்தை நிறுவியுள்ளார்.  மதுரை முத்துபட்டியை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் 37 ஆண்டுகளாக திமுகவில் இருந்து வருகிறார். அவர் முத்துபட்டி பகுதியில் புதிய இல்லத்தை காட்டியுள்ளார். அவர் கட்டிய இல்லத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவாக திமுக அரசு கொண்டுவர நினைத்த பேன நினைவு சின்னத்தை 30ஆயிரம் செலவில் 5 அடி உயரத்தில் அமைத்து கட்டியுள்ளார். 


அவர் கட்டிய புதுமனை புகுவிழாவில் திமுக எம்.எல்.ஏ., கோ.தளபதி, தொழிலதிபர் குருசாமி ஆகியோர் இன்று காலை திறந்து வைத்தனர். அவர் திறந்து வைத்த அந்த இல்லத்தில் 30 ஆயிரம் செலவில் தலைவர் கலைஞர் பேனா சிலையை நிறுவியுள்ளார். அந்த நினைவு சின்னம் அப்பகுதியில் வருகை தரும் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஒவ்வொரு தொண்டரின் வீட்டிலும் பேனா சிலை அடுத்தடுத்து உருவாகும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை என்பதற்க்கு இது ஒரு எடுத்துக்காட்டு. சுய விளம்பரத்திற்காக அரசியல் செய்யும் யாரும் கலைஞரின் புகழை மறைக்க முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.


மேலும் படிக்க | ஐஸ்வர்யா ராய்க்காக மதுரையில் ஒட்டப்பட்ட வித்தியாசமான போஸ்டர்! இணையத்தில் வைரல்!


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ