செக் மோசடி வழக்கில் நடிகர் நெப்போலியனுக்கு கரூர் விரைவு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கரூரை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் கோபால கிருஷ்ணன் என்பவரிடம் சென்னையை சேர்ந்த விஜயப்ரகாஷ், ஆனந்த் ஆகியோர் திரைப்படம் தயாரிப்பதற்காக கடந்தாண்டு ரூ.1.10 கோடி கடன் பெற்றுள்ளனர். தாங்கள் பெற்ற கடனில் ரூ.56,40,000 திரும்ப வழங்கிய நிலையில், மீதமுள்ள தொகையை வழங்கவில்லை.


பட வெளியீட்டின்போது விஜயப்ரகாஷ், ஆனந்த்தை கோபாலகிருஷ்ணன் தொடர்பு கொண்டு மீதமுள்ள தொகையை கேட்டபோது, அந்தப் படத்தில் நடித்த நடிகர் நெப்போலியன் அந்தத் தொகைக்கு பொறுப்பேற்றுக்கொண்டு ரூ.25 லட்சம் வழங்கியதுடன், மீதமுள்ள ரூ.28,54,000-க்கு காசோலை வழங்கியுள்ளார்.


ஆனால், வங்கியில் பணம் இல்லாத காரணத்தால் காசோலை திரும்பியது. இதுதொடர்பாக கரூர் விரைவு நீதிமன்றத்தில் நடிகர் நெப்போலியன் மீது கோபாலகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்துள்ளார். 


இந்த வழக்கில் நடிகர் நெப்போலியனுக்கு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், நெப்போலியனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து கடந்த 22-ஆம் தேதி நீதிபதி உத்தரவிட்டார்.