மதுரையிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடியில் தமிழ்நாடு அரசின் சார்பில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இங்கு நாள்தோறும் புதிது புதிதான பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு அரசு (TN Government) சார்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கீழடி அகழாய்வு என்பது தேவையற்ற ஒன்று என ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளி வந்திருந்தது. இதற்கு பதிலளித்துள்ள தொழில்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘கீழடி அகழாய்வு தொடர்ந்து நடைபெறுவதால் தமிழர்களின் தொன்மை , வரலாறு ஆகியவை பற்றிய  பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த உண்மைகள் வெளி வருவதால் ஒரு சிலருக்கு வயிறு எரிகிறது. அவர்கள் வயிறு வேண்டுமானால் எரிந்துவிட்டு போகட்டும். நாங்கள் தொடர்ந்து இந்த அகழாய்வு மேற்கொள்வோம். அறிஞர் அண்ணா கூறியது போல தமிழ் நாகரிக பண்பாட்டு தீ அகிலமெல்லாம் பரவட்டும். தமிழர் உணர்வு பொங்கட்டும்! பொங்கட்டும்’என்று கூறினார்.


கீழடியில் (Keezhadi) 110 ஏக்கரில் தொல்லியல் மேடு அமைந்துள்ளது. இங்கு 2014 ஆம் ஆண்டிலிருந்து அகழாய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. மத்திய தொல்லியல் துறை மூலம் மூன்று கட்ட அகழாய்வு நடந்த நிலையில், அடுத்த 3 கட்ட அகழாய்வு தமிழக தொல்லியல் துறை மூலமும் நடந்தன. இப்போது ஏழாம் கட்ட ஆய்வு நடந்து வருகிறது. இதுவரை நடந்த அனைத்து கட்ட ஆய்வுகளிலும் பல தொல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. 


ALSO READ: கல்வி டிவியில் சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


இதுவரை நடந்துள்ள அகழ்வாய்வுகள் மூலம் கீழடி நகரத்தின் தொன்மைக்கு சான்று கிடைத்துள்ளது. கீழடி நகர நாகரிகம் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு ஒரு வெள்ளிக்காசு கண்டறியப்பட்டுள்ளது.


இதைத் தொடர்ந்து, கீழடி அள்ளித் தந்த மரபுச் செல்வங்களுக்குள் ஒரு வெள்ளிக் காசும் இப்போது இணைந்திருக்கின்றது என தமிழ் - ஆட்சி மொழி, தமிழ்க் கலாச்சாரம், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 


அவர் தனது ட்விட்டர் பதிவில், “கீழடியின் கொடை குறைவதில்லை! கங்கைச் சமவெளியுடனான பழந்தமிழர் வணிகத் தொடர்பிற்கான மற்றுமொரு சான்று . வெள்ளியிலான முத்திரைக் காசு(Punch Marked Coin) ஒன்று கீழடி அகழ்வாய்வுப் பண்பாட்டு அடுக்கில் 146 செ.மீ ஆழத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. காலம் பொ.யு.மு 4ம் நூற்றாண்டின் நடுப்பகுதி.” என்று கூறியுள்ளார்.



தற்போது கண்டறியப்படுள்ள நாணயத்தில், முன்புறம் சூரிய சந்திரர்கள், காளை, எருது, நாய் போன்ற குறியீடுகளும் பின்புறம் அரைவட்டம் மற்றும் 'ட' வடிவக் குறியீடுகளும் காணப்படுகின்றன. 2.20 கிராம் எடையுள்ள இந்த வெள்ளிக் காசு, வட புலத்தாருடன் நம் பழந்தமிழர் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளுக்கான மற்றுமொறு சான்று என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


ALSO READ: Elections: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கின


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR