Kerala Lok Sabha Election Result 2024: திருவனந்தபுரத்தில் நான்காவது முறையாக சசி தரூர்
Kerala Lok Sabha Election Result 2024: திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகருடன் கடும் போட்டி நிலவிய நிலையில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் வெற்றி பெற்றுள்ளார். 4வது முறையாக திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து சஷி தரூர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kerala Lok Sabha Election Result 2024: தேர்தல் திருவிழாவின் உச்சக்கட்டம் இன்று!! 2024 மக்களவைத் தேர்தலின் முடிவுகள் இன்று தெரிந்துவிடும். அரசியல்வாதிகள், பொது மக்கள் என அனைவரும் இந்த முடிவுகளுக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவு இம்முறை தேர்தல் மீதான் ஆர்வம் அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் நான்காவது முறையாக சசி தரூர்
திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகருடன் கடும் போட்டி நிலவிய நிலையில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் வெற்றி பெற்றுள்ளார். 4வது முறையாக திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து சஷி தரூர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றியை நோக்கி சுரேஷ் கோபி
திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி சுமார் 73,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். வாக்கு வித்தியாசம் அதிகம் உள்ள காரணத்தால் இவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. இதன் மூலம் கேரளாவில் பாஜக் கால் பதிக்கும் தருணம் வந்துள்ளது.
வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலை
வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். சிபிஎம்மின் அன்னி ராஜா பின்தங்கியுள்ளார். துவக்க நிலை போக்குகள், காங்கிரஸ் தலைமையிலான UDF 18 இடங்களிலும், CPIM தலைமையிலான LDF 4 இடங்களிலும், காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர் திருவனந்தபுரத்தில் முன்னிலை வகிக்கின்றன.
20 மக்களவைத் தொகுதிகள்
கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் காலை 7 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள், தேர்தல் ஆணைய பார்வையாளர்கள் முன்னிலையில் அறைகள் திறக்கப்பட்டன. ஏப்ரல் 26 அன்று ஒரே கட்டமாக நடைபெற்ற கேரள மக்களவைத் தேர்தல் 2024 இல் 67.15% வாக்குகள் பதிவாகியுள்ளன.
களத்தில் உள்ள முக்கிய தலைவர்கள்
- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் சிபிஐ(எம்) இன் அன்னி ராஜா மற்றும் பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்திரனை எதிர்த்துப் போராடுகிறார்.
- இரண்டு முறை எம்பியாக இருந்த சசி தரூர் திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை எதிர்கொள்கிறார்.
- வடகரா தொகுதியில் கேரள முன்னாள் அமைச்சர் கே கே ஷைலஜா, யுடிஎப் கட்சியின் ஷாபி பரம்பிலை எதிர்த்து போட்டியிடுகிறார்.
- பத்தனம்திட்டாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி, கேரள முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் (எல்.டி.எஃப்.) மற்றும் மூன்று முறை எம்.பி.யாக இருந்த ஆண்டோ ஆண்டனி (யு.டி.எஃப்.) ஆகியோரை எதிர்கொள்கிறார்.
- பாஜக நட்சத்திர வேட்பாளர் சுரேஷ் கோபி திருச்சூரில் போட்டியிடுகிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ