Coimbatore Election Result 2024: ட்விட்டரில் மாஸ் காட்டும் #Annamalai, #Coimbatore.... டிரெண்ட் ஆகும் அண்ணாமலை எம்பி ஆவாரா?

Coimbatore TN Election Result 2024: சில குறிப்பிட்ட தொகுதிகளின் மீதான் ஈர்ப்பு ஆரம்பம் முதல் இருந்துவந்துள்ளது. அதில் கோயம்புத்தூரும் ஒன்று. கோவை தொகுதியை டிரெண்டாக்கியதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முக்கிய பங்கு உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 4, 2024, 09:36 AM IST
  • ஆர்வத்தை தூண்டிய தேர்தல்.
  • டிரெண்ட் ஆகும் அண்ணாமலை.
  • என் வழி தனி வழி: அண்ணாமலை.
Coimbatore Election Result 2024: ட்விட்டரில் மாஸ் காட்டும் #Annamalai, #Coimbatore.... டிரெண்ட் ஆகும் அண்ணாமலை எம்பி ஆவாரா? title=

Coimbatore TN Election Result 2024: 2024 மக்களவைத் தேர்தல் நாடு முழுதும் ஜூன் 1 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்குகளை எண்ணும் பணி நடந்து வருகின்றது. மிகுந்த பரபரப்புடன் நடக்கும் வாக்கு எண்ணிக்கையின் நொடிக்கு நொடி அப்டேட்களை மக்கள் கவனித்த வண்ணம் உள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த தேர்தல்கள் மக்களிடம் மிகவும் பிரபலமாக இருந்துள்ளது. 

ஆர்வத்தை தூண்டிய தேர்தல்

நாடு முழுதும் அதிக ஆர்வத்தை தூண்டிய இந்த தேர்தலில் தமிழ்நாட்டு மக்களும் பின்தங்கவில்லை. தேர்தல் தேதி அறிவிப்பு, பிரச்சாரம், வாக்குப்பதிவு என அனைத்திலும் அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இணையாக, பொது மக்களும் அசத்தலான பங்காற்றியுள்ளனர். 

டிரெண்ட் ஆகும் அண்ணாமலை

இந்த நிலையில், சில குறிப்பிட்ட தொகுதிகளின் மீதான் ஈர்ப்பு ஆரம்பம் முதல் இருந்துவந்துள்ளது. அதில் கோயம்புத்தூரும் ஒன்று. கோவை தொகுதியை டிரெண்டாக்கியதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முக்கிய பங்கு உள்ளது. இன்று வாக்குகள் எண்ணப்படும் நாளிலும் #coimbatore, #Annamalai ஆகிய ஹேஷ்டேக்குகள் டிடெண்டிங்கில் உள்ளன.

என் வழி தனி வழி: அண்ணாமலை

டிரெண்ட் ஆகும் அண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவாரா? அதுதான் பெரிய கேள்வி!! பாஜக மத்திய தலைமை அவர் மீது ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை கொண்டு அவரை பல வழிகளில் பிரபலப்படுத்தியுள்ளார்கள். இது தவிர இதுவரை யாரும் காணாத ஒரு தனி வகை அரசியல்வாதியாக அவர் வலம் வருகிறார். அவரது பேச்சு, பொதுமக்களிடம் அவர் நடந்துகொள்ளும் விதம், பத்திரிக்கையாளர்களை அவர் கையாளும் விதம் என அத்தனை விஷயங்களிலும் ஒரு தனி பாணி தெரிகிறது.

மேலும் படிக்க | Uttar Pradesh Lok Sabha Election Result 2023: மீண்டும் யோகியா இல்லை அகிலேஷின் அதிர்ச்சி கொடுப்பாரா?

அன்ணாமலை வெல்வாரா?

அண்ணாமலை வெல்வாரா? என்ற கேள்வியை எழுப்பினால், ‘கண்டிப்பாக அவர்தான் வெல்வார்’ என ஒரு சாராரும். ‘டெபாசிட் கூட வராது’ என ஒரு சாரரும் கூறி வருகிறார்கள். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த இருவித கருத்துகளிலும் உச்சகட்ட உறுதி தெரிகின்றது. இப்படி இருக்க, கோவை தொகுதி தேர்தல் முடிவுகள் அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்றாக உள்ளது. 

கள நிவரம் என்ன சொல்கிறது?

கோவை தொகுதியில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக -வுக்கு செல்வாக்கு அதிகம். பாஹக-வின் செல்வாக்கு நகர்ப்புறங்களில் அதிகமாக காணப்படுகின்றது. பல அண்டுகளாக திராவிட கட்சிகளுக்கு மட்டுமே வாக்களித்து வரும் பழைய வாக்காளர்களை அண்ணாமலையில் பிரச்சாரம் மாற்றியுள்ளதா? கோவை மாற்றத்துக்கு வாக்களிட்துள்ளதா? அல்லது, இருக்கும் ஆட்சியே நல்லாட்சி என குறுகிறதா? இன்று மாலைக்குள் தெரியும்!!

மேலும் படிக்க | Karnataka Lok Sabha Election Result 2024: கர்நாடகாவில் வரலாறு படைக்குமா காங்கிரஸ்? தேசிய அளவில் இது முக்கியம் - ஏன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News