கேரள நிலச்சரிவில் இறந்த தமிழக தேயிலைத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு நிதி உதவி: EPS
கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் வாரிசுகளுக்கும் மூன்று லட்சம் ரூபாய் உதவி வழங்கப்படும் என்று முதல்வர் கே பழனிசாமி புதன்கிழமை அறிவித்தார்.
சென்னை: கேரளாவில் (Kerala) ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் வாரிசுகளுக்கும் மூன்று லட்சம் ரூபாய் உதவி வழங்கப்படும் என்று முதல்வர் கே பழனிசாமி புதன்கிழமை அறிவித்தார்.
சமீப நாட்களாக கேரளாவில் பெய்து வரும் பெரு மழை காரணமாக கேரளாவின் இடுக்கியில் நிலச்சரிவு (Idukki Landslide) ஏற்பட்டது. இதில் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் நேரடி வாரிசுகளுக்கு மூன்று லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி (K Palanisamy) அறிவித்துள்ளார்.
பலத்த காயங்களுக்கு ஆளானவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உதவி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ALSO READ: கேரளாவின் இடுக்கியில் நிலச்சரிவு: 5 பேர் பலி, பல தேயிலைத் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்!!
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மூணாரில் கொல்லப்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில் (Tea Estate Labourers) பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள், அண்டை மாநிலமான கேரளாவில் நீண்ட காலமாக வசித்து வேலை செய்து வருவதாகவும் பழனிசாமி கூறினார்.
அவரது உத்தரவின் பேரில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குழு கேரளாவில் மீட்புப் பணிகளில் இணைந்து செயல்பட்டது. மேலும், 12 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் முதல்வர் தெரிவித்தார். தொழிலாளர்களின் மரணங்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களை விரைவாக மீண்டு வர முதல்வர் பிரார்த்தனை செய்தார்.
செவ்வாய்க்கிழமை மேலும் மூன்று உடல்கள் மீட்க்கப்பட்ட நிலையில், அண்மையில் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆனது.
ALSO READ: கேரளா இடுக்கி நிலச்சரிவு... உதவிகரம் நீட்டிய தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி..!!