கிங்மேக்கர்ஸ்' ஐ.ஏ.எஸ் அகாடமியின் 10ம் ஆண்டு விழா, சென்னையில் நடைப்பெற்றது. இதில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரங்கராஜன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பேசிய அவர், உலகளவில் பொருளாதார வளர்ச்சியில் தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்தியா விரைவில் 3ஆவது இடத்தை எட்டும் என கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐ.ஏ.எஸ் அகாடமியின் 10ஆம் ஆண்டு விழா:


சென்னை அண்ணா நகரில் உள்ள கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இவ்விழாவில், சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்தோருக்கு 'டாக்டர் அப்துல் கலாம்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். சென்னை கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில், சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு , 'டாக்டர் அப்துல் கலாம்' பெயரில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 


மேலும் படிக்க | இனி வீதியில் நடப்பதற்கே வரி செலுத்த வேண்டுமா? இபிஎஸ் விமர்சனம்!


அகாடமியில் பயின்று அகில இந்திய ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த இஷிதா கிஷோரை கவுரவிப்பதோடு முதலிடம் பிடிப்பதற்கு அவர் மேற்கொண்ட கடுமையான முயற்சிகள், தீவிரமான பொறுப்புணர்வு, விடா முயற்சி ஆகியவையும் இவ்விழாவில் பாராட்டப்பட்டது. இதன் மூலம் மிகவும் கடினமான தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு உதாரணமாக இவர் திகழ்கிறார் அந்த அகாடமியின் நிர்வாகிகள் விழா மேடையில் பேசுகையில் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். 



“இந்தியா 3வது இடத்தை பிடிக்கும்..”


ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், சி.ரங்கராஜன் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களை கவுரவித்ததோடு விழாவில் சிறப்புறையாற்றினார். அவர் பேசுகையில், “பொருளாதார வளர்ச்சியில், உலகளவில் ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது. விரைவில் மூன்றாவது இடத்தை எட்டும்” என கூறினார். அவர் மேலும் பேசியது பின்வருமாறு:


“பொருளாதார வளர்ச்சி நிலையற்ற தன்மையை கொண்டது. பொருளாதார வளர்ச்சி என்பது எண்களில் இல்லை. இது, சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும். இதில், அவ்வப்போது ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். பொருளாதார வளர்ச்சியில் நிலையற்ற தன்மைக்கு, பல்வேறு காரணங்கள் உண்டு. அடுத்து வரும் 10 ஆண்டுகளில், நம் முன் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் உள்ளன. 


இந்த சவால்களை இளம் தலைமுறை சிவில் சர்வீசஸ் வெற்றியாளர்கள் தயக்கமின்றி எதிர்கொண்டு வெற்றி காண வேண்டும். உலகளவில், தனிநபர் வருமானத்தில் 142 இடத்தில் இந்தியா உள்ளது. தனிநபர் வருமானத்தை அதிகரிக்க வேண்டும்” என்று கூறினார். 


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு:


தமிழ்நாடு பாஜக தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலையும் இவ்விழாவில் கலந்து கொண்டார். அவர் பேசும் போது, "ஐஏஎஸ் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்க அளவிலானவர்கள் கிங் மேக்கர்ஸ் அகாடெமியைச் சேர்ந்தவர்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்” என்றார். மேலும், “குறிப்பாக அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில்  சிலர் இந்த அகாடெமியைச் சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது" என்றார்.


மேலும் படிக்க | துணை முதலமைச்சர் ஆகிறேனா? உதயநிதி அதிரடி பேட்டி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ