புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் விவசாயியை போன்று வயலில் இறங்கி வேலை செய்தா புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாக பரவி வருகிறது. இவரை ஆளுநர் கிரண் பேடி ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேளாண்துறை அமைச்சர் இருப்பது எனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், அவர்கள் அனைவரும் விவசாயிகளை போன்று விவசாய நிலங்களில் இறங்கி வேலை செய்வார்களா?. அப்படி ஒரு வேளாண்துறை அமைச்சரை நாம் காண்பது மிக பெரிய விஷயம். இந்நிலையில், இந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.  


காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கமலக்கண்ணன். இவர் புதுச்சேரி மாநில வேளாண்துறை அமைச்சராகச் செயல்பட்டு வருகிறார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சர் கமலக்கண்ணன் காரைக்கால் மாவட்டம் அம்பாகரத்தூரில் உள்ள தனது வயலில் நெல் நடவுப் பணிக்காக மண்வெட்டியை எடுத்துச் சேற்றில் இறங்கி வேலை செய்துள்ளார். 


புதுச்சேரி மாநில வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தனது வயலில் வேலை செய்ததைத் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பாராட்டியுள்ளார். இது குறித்த படத்தைப் பார்த்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தனது ட்விட்டர் பக்கத்தில், "வேளாண்துறை அமைச்சர் பொறுப்பில் தகுதியுள்ள சரியான ஒருவர் இருகிறார்" என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.