Kishore K Swamy: தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து- கிஷோர் கே சுவாமி கைது
சமூக வலைதளத்தில் தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து பதவிட்டதாக கிஷோர் கே.சுவாமியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சமூகவலைதளங்களில் பிரபலமானவராக அறியப்படும் கிஷோர் கே சுவாமி (Kishore K Swamy) என்பவர் பாஜகவுக்கு ஆதரவாக தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். மேலும் பெண்களுக்கு எதிராகவும் சாதி ரீதியாகவும், மத வெறுப்புடனும் அவரது பதிவுகள் உள்ளன. அத்துடன் பெண் பத்திரிகையாளர்களை அவர் தொடர்ந்து மோசமான வார்த்தைகளால் விமர்சித்துவந்தார்.
தற்போது அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி திமுகவுக்கு (DMK) எதிரான கருத்துகளை தெரிவித்து அக்கட்சியின் தலைவர்களையும் தொடர்ந்து சமூக வலைத்தள பக்கங்களில் (Social Media) விமர்சித்து வந்தார்.
ALSO READ | மத்திய அரசு, ட்விட்டருக்கு விடுக்கும் இறுதி எச்சரிக்கை; அடுத்தது என்ன..!!
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கிஷோர் கே சுவாமி மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் கடந்த 10 ஆம் தேதி காவல்துறையினரிடம் புகார் அளித்து இருந்தார். அதன்படி கிஷோர் கே சுவாமி மீது ஐபிசி 153, 505 (1/B), 505 (1-C) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
1. ஐபிசி 153 - கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல்
2. ஐபிசி 505 (1/B) - அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய தூண்டுதல்
3. ஐபிசி 505 (1-C) - ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல்
இதனையடுத்து கிஷோர் கே சுவாமியை 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தாம்பரம் கிளை கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி அவர் கைது செய்யபட்டு சைதாபேட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
ALSO READ | Twitter புதிய விதிகளுக்கு இணங்கவில்லை என்றால் தடை நிச்சயம்: தில்லி உயர்நீதி மன்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR