திருச்சியில் உள்ள தேசிய கல்லூரியில் விளையாட்டில் மறுமலர்ச்சி என்கிற தலைப்பில் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நான்கு நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இன்று அந்த கருத்தரங்கை விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்கே.என்.நேரு, பள்ளி கல்வி துறை அமைச்சரும், கருத்தரங்கின் தலைவருமான பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கருத்தரங்கில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பின் சாதாரண துறையை முதன்மையான துறையாக்கி இருக்கிறார். விளையாட்டு துறையில் எந்த நீட் தேர்வும் இல்லை. திறமை இருந்தால் உயர்ந்த இடத்திற்கு செல்லலாம். விளையாட்டு துறைக்கு தமிழ்நாட்டில் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் அதை திருச்சியில் அமைத்து தர வேண்டும் என அமைச்சர் உதயநிதிக்கு கோரிக்கை வைக்கிறேன் என்றார்.



அடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், " விளையாட்டு துறை வரலாற்றில் முக்கிய தருணத்தில் இருக்கிறோம். விளையாட்டு துறையில் பல்வேறு மாற்றங்கள் வேகமாக நடந்து வருகிறது. விளையாட்டில் பல புதிய கண்டுபிடிப்புகளும் உருவாகி வருகிறது. விளையாட்டு துறையின் களம் தொடந்து பல்வேறு தொழில்நுட்பங்கள், சமூக மாற்றங்கள் ஆகியவற்றால் மாறிக்கொண்டு இயக்கப்படுகிறது. விளையாட்டு துறையை சேர்ந்தவர்கள் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப தொலைநோக்கோடும், புதிய சிந்தனையோடும், உறுதியோடும் பயணிக்க வேண்டும்.


மேலும் படிக்க | இரட்டை இலை சின்னம் மீண்டும் முடங்கும் என ஓபிஎஸ் அணி பகிரங்க எச்சரிக்கை


தமிழ்நாட்டை இந்திய துணை கண்டத்தின் விளையாட்டு தலைநகராக மாற்றுவதோடு மட்டுமல்லாமல்  இந்தியாவையே உலக அளவிலான விளையாட்டு தலைநகராக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறோம். அதன் வெளிப்பாடாக தான் தமிழ்நாட்டில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை நடத்தி வருகிறோம். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது.  முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு இடம் பிடித்தது வரலாற்றிலேயே இது தான் முதல் முறை என்பதை பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.



விளையாட்டு வீரர்களுக்கு ஒரு துன்பம் என்றால் அவர்களுக்காக உடனடியாக களத்தில் இறங்கி உதவ கூடிய அரசு தான் தற்போதைய தமிழ்நாடு அரசு. மணிப்பூரில் கலவரம் நடைபெறதால் அந்த மாநிலத்தை சேர்ந்த வால் வீச்சு வீரர்கள் தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்க முதலமைச்சர் வழிவகை செய்தார். அதில் பயிற்சி பெற்ற இருவர் கேலோ இந்தியா போட்டியில் வெண்கலம் வென்றார்கள். அதற்கு காரணம் தமிழ்நாடு அரசு தான். தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுண்டேசன் மூலமாக இதுவரை  சுமார் 100 விளையாட்டு வீரர்களுக்கு 18 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளோம்.


எல்லோரையும் போல மாற்று திறனாளி வீரர்களும் சாதிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கும் உதவி செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி 5 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது. அதன் மூலம் கிராமப்புறங்களிலிருந்து பல திறமையான விளையாட்டு வீரர்களை கண்டறிய முடிந்தது. விளையாட்டு துறையில் பல சாதனைகளை தமிழ்நாடு படைத்து வரும் நிலையில் இந்த மாநாடு விளையாட்டு துறையை மேலும் பல உயரங்களுக்கு எடுத்து செல்லும் என்பது பெருமையாக உள்ளது" என்றார்.


மேலும் படிக்க | தலைவர் விஜய் ஆப்சென்ட்... ரகசிய இடத்தில் மீட்டிங் - முதல் கூட்டத்தில் நடந்தது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ