தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் செய்பவர்கள் இ -பதிவு (E-Registration) செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை (https://eregister.tnega.org) இணையதளத்தில் இ-பதிவு செய்து, இ-பதிவு (E-Registration)  மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | மக்கள் கோரிக்கையை ஏற்று இ-பதிவில் மீண்டும் சேர்க்கப்பட்டது திருமண பிரிவு


திருமண நிகழ்ச்சிக்கான இ-பதிவு விண்ணப்பிப்பது எவ்வாறு:
* இ-பதிவு முறை https://eregistet.tnega.org  என்ற இணையதளத்தில் ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம். 
* இந்த இணையதளத்தில் உள்நுழைந்தவுடன், எங்கே பயணம் செய்கிறீர்கள்? என ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும். 
* மாவட்டத்திற்குள், மாவட்டங்களுக்கு இடையேயான பயணம் என்றால் அந்த ஆப்ஷன் ஐ தேர்ந்தெடுக்கவும். 
* இ- பதிவுக்கு உள்நுழைவதற்கு உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதனை பதிவு செய்தவுடன். இ- பதிவு பக்கத்துக்கு செல்லும்.
* இதில் நீங்கள் திருமணத்திற்கான இ-பதிவு ஆப்ஷன் ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
* பிறகு பயணத் தேதி, பயணக்காரணத்திற்கான ஆவணம் சமர்பிக்க வேண்டும். அந்த ஆவணமானது 1MB க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரர் அடையாள சான்று உள்ளிடவும். 
* இந்த அடையாளச் சான்றுகளில் இருக்கும் எண்ணை பதிவு செய்யவேண்டும்
* நீங்கள் சமர்பித்த ஆவணங்கள் சரியான இருந்தால் உங்களது இ-பதிவு வெற்றிகரமான முடிவடையும்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR