Pongal 2022: எங்களுக்கும் உண்டு பொங்கல் என மகிழும் யானையும் குதிரையும்
மாட்டுக்கு மட்டுமா பொங்கல்? விலங்குகள் அனைத்திற்கும் பொங்கல் உண்டு! தமிழகத்தில் யானையும், குதிரையும் பொங்கல் கொண்டாடும்!
கோவை: மாட்டுக்கு மட்டுமா பொங்கல்? விலங்குகள் அனைத்திற்கும் பொங்கல் உண்டு! தமிழகத்தில் யானையும், குதிரையும் பொங்கல் கொண்டாடும்!
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழி கமுத்தியில் கும்கி கலீம், சின்னதம்பி, அரிசி ராஜா உட்பட இருபத்தி ஏழு காட்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு உத்தரவின் பேரில் இங்கு ஆண்டு தோறும் யானை பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானோ வைரஸ் தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்து வந்தநிலையில், தற்பொழுது தமிழக அரசு கூடுதல் தளர்வுகள் அறிவித்துள்ளது.
சமூக இடைவெளி மற்றும் முக்கவசம் அணிந்து டாப்ஸ்லிப் பகுதிக்கு முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு இந்த பொங்கல் கொண்டாடப்படுகிறது.
வனத்துறை வாகனத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்று யானை வளர்ப்பு முகாமுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, யானை பொங்கல் விழா கொண்டாடபட்டது.
பழக்குடியின மக்கள் புதுபானையில் பொங்கல் வைத்து விநாயகர் கோவிலில் சிறப்புப் பூஜைகள் செய்தனர். அங்குள்ள வளர்ப்பு யானைகளுக்கு பழம், கரும்பு, சத்து மாவு என பிரசாதங்கள் உணவாக அளிக்கப்பட்டது.
மேலும் வளர்ப்பு யானைகள் தங்கள் தும்பிக்கைகளைத் தூக்கி வழிபாடு செய்தது அங்கிருந்த சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்தது.
கிராமங்களில் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கான பொங்கல் வைப்பது யானை முகாமில் யானை பொங்கல் வைத்து கொண்டாடவது மிகவும் மகிழ்ச்சியாக இருப்தாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.
ALSO READ | Pongal 2022: திகட்டாமல் தித்திக்கும் தைப்பொங்கல் கற்றுத்தரும் வாழ்க்கைப் பாடங்கள்
குதிரை பொங்கல்
திண்டுக்கல்லை அடுத்துள்ள சிறுமலை வன கிராமங்களில் குதிரை பொங்கலை மலைக்கிராம மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
திண்டுக்கல் அருகே பழையூர், புதூர், வேளாம்பண்ணை, தாளக்கடை, கடமான்குளம், அகஸ்தியர்புரம், தென்மலை, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.
மலைப்பகுதியில் விளையும் காய்கறி மற்றும் பழங்களை ஊருக்குள் எடுத்து வர குதிரையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரண்டு குதிரைகளாவது வைத்திருப்பார்கள்.
சிறுமலை மலைப்பகுதியில் குதிரைகளை தெய்வமாக கருதி தங்களுக்கு விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் குதிரைகளை குளிப்பாட்டி, அலங்காரம் செய்து மாலை அணிவித்து சலங்கை கட்டி பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர்.
மாட்டுப் பொங்கலன்று, மாடுகளுக்கு சிறப்பு செய்வதுபோல, குதிரைகளுக்கும் சிறப்பு செய்து பூஜைகள் செய்தனர். பூஜைக்கு படைத்த பொங்கலை குதிரைக்கு ஊட்டி விட்ட பிறகுக், அனைத்து குதிரைகளையும் ஒன்று சேர்த்து ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
குதிரைப் பொங்கல்ன்று, குதிரைக்கு முழு ஓய்வு அளித்து அவற்றாஇ சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விட்டு விடுவார்கள். தங்களது விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் குதிரைகளை தெய்வமாக வழிபட்டு சிறுமலை மலைக்கிராம பொதுமக்கள் குதிரை பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.
ALSO READ | குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR