உச்சநீதிமன்ற தீர்ப்பால் லதா ரஜினிகாந்துக்கு வந்த சோதனை!
கோச்சடையான் படத்துக்காக பெற்ற ரூ. 6.2 கோடி கடனை 3 மாதத்துக்குள் லதா ரஜினிகாந்த் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோச்சடையான் படத்துக்காக ஆட் பீரோ நிறுவனத்திடமிருந்து லதா ரஜினிகாந்த் ரூ.14.9 கோடி கடன் வாங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கோச்சடையான் படத்துக்காக பெற்ற 10 கோடி ரூபாய் கடனில் எட்டரை கோடி ரூபாயை திருப்பித் தரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து, அந்த நிலுவை தொகையை செலுத்த உத்தரவிடக் கோரியும் லதா ரஜினிகாந்த் மீது ஆட்பீரோ நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்ததையடுத்து, நிலுவை கடனை எப்போது திருப்பிச் செலுத்துவீர்கள் என்று லதா ரஜினிகாந்த் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பின்னர் இந்த வழக்கு தொடர்பாக பிற்பகல் 12.30 மணிக்குள் பதில் அளிக்கவும் கெடு விதித்தது. இதையடுத்து, ரூ.6.2 கோடி நிலுவைத் தொகையை 3 மாதத்துக்குள் லதா ரஜினிகாந்த் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.