மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் மருத்துவ குணமிக்க அத்திப்பழம் சீசன் இந்த ஆண்டு அமோகமாக தொடங்கியுள்ளது.!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் மருத்துவ குணம் அதிகம் உள்ள அத்திப்பழம் சீசன் தொடங்கியுள்ளது. விளைச்சல் அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் லாபமும் தருகின்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இதனை தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர்.


கொடைக்கானல் (Kodaikanal) கீழ் மலைப் பகுதியில் உள்ள தாண்டிக்குடி, பண்ணைக்காடு, அணுக்கம், பெருமாள் மலை, பேத்துப்பாறை போன்ற பகுதிகளில் மருத்துவ குணமிக்க அத்திப்பழம் அதிகளவில் விளைகிறது.


இந்தப் பழங்கள் தற்போது அதிக எண்ணிக்கையில் விளைந்து வருகின்றன. மருத்துவ குணமும் அதிகம் உள்ளதால் இப்பழத்திற்கான தேவையும் பெருகி வருகிறது.


மருத்துவர்களின் படி இப்பழத்தினை நாம் அன்றாடம் எடுத்துக்கொண்டால், நோய் எதிப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். இது தவிர சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றையும் அத்திப்பழம் கட்டுப்படுத்தும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். 


ALSO READ: தமிழகத்தில் ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது: முதல்வர் மு.க. ஸ்டாலின்


பழத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகள் இதனை அதிக அளவில் எடுத்து கொள்கிறார்கள். குழந்தைகளுக்கும் இது பெருமளவில் கொடுக்கப்படுகிறது.


இப்பொழுது அத்திப்பழ (Fig) சீசன் தொடங்கியுள்ளதால் பழங்கள் மரங்களில் காய்த்து குலுங்குகின்றன. விளைச்சலும் அதிகமாக உள்ளதால், அத்திப்பழங்களின் விலை தற்போது கிலோ ரூபாய் 150 என்று  விற்பனையாகிறது.


இதனால் அத்திப்பழங்களை விளைவித்த விவசாயிகளுக்கும் உழைப்பிற்கேற்ற பலன் இந்த ஆண்டு அவர்களுக்கு கிடைத்து வருகிறது. ஆனால் சென்ற ஆண்டு அப்படி இருக்கவில்லை. 


கொரோனா ஊரடங்கினால் (Lockdown) போடப்பட்ட கட்டுப்பாடுகளால் பழங்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்குப் போதிய விலையும் கிடைக்கவில்லை. 


ஆனால் தற்போது இவ்வாண்டில் அத்திப்பழத்தின் அதிக விளைச்சல் காரணமாக பழங்கள் நன்றாக விற்பனையாகி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.


ALSO READ: Health News: அத்திப்பழமும் அதிகமானால் ஆபத்துதான், விவரம் இதோ!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR