காத்திருக்கிறது கொடைக்கானல்: நாளை முதல் பயணிகளின் வருகைக்கு அனுமதி!!

கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பார்க், ரோஸ் பார்க் மற்றும் செட்டியார் பூங்கா ஆகியவை நாளை முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக திறந்திருக்கும்.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 8, 2020, 03:32 PM IST
  • கொடைக்கானலில் புதன்கிழமை முதல் சுற்றுலா நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும்.
  • திண்டுக்கல் மாவட்டத்திற்குள் சுற்றுலாப் பயணிகளுக்கு அடையாளச் சான்று அவசியம்.
  • மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாகும்.
காத்திருக்கிறது கொடைக்கானல்: நாளை முதல் பயணிகளின் வருகைக்கு அனுமதி!!

சென்னை: கொரோனா தொற்று (Corona Virus) உலகையே புரட்டிப்போட்டுள்ளது. இதை சமாளிக்கும் வகைகளைக் கண்டுபிடித்து மெல்ல மெல்ல நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவிலும் பல கட்ட லாக்டௌன்களைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக பல தளர்வுகள் மூலம் அன்லாக் செயல்முறை நடந்துகொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்திலும் கட்டம் கட்டமாக இயல்பு நிலை திரும்பிக்கொண்டிருக்கின்றது.

தமிழகத்தின் மலைகளின் நகரமான கொடைக்கானலில் (Kodaikanal) புதன்கிழமை முதல் சுற்றுலா நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயா லட்சுமி அறிவித்துள்ளார்.

COVID-19 தொற்றுநோயால் பிரபலமான சுற்றுலாப் பிரதேசமான கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளுக்கு பல மாதங்களாக மூடப்பட்டிருந்தது.

ALSO READ: மெட்ரோ பயணிகளின் கனிவான கவனத்திற்கு: உங்களை வரவேற்க காத்திருக்கிறது Chennai Metro!!

திண்டுக்கல் மாவட்டத்திற்குள் (Dindigul District) சுற்றுலாப் பயணிகளுக்கு அடையாளச் சான்று அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் (District Collector) தெரிவித்தார். மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் (E-Pass) கட்டாயமாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பார்க், ரோஸ் பார்க் மற்றும் செட்டியார் பூங்கா ஆகியவை நாளை முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக திறந்திருக்கும்.

தமிழக அரசு சமீபத்தில் சில லாக்டௌன் கட்டுப்பாடுகளை தளர்த்தியது. சலுகையின் ஒரு பகுதியாக, சென்னையில் மெட்ரோ ரயில்களை மீண்டும் இயக்க அரசாங்கம் அனுமதித்தது. பின்னர் மாநிலத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பயணிகள் ரயில்களை இயக்கவும் அரசு அனுமதித்தது.

மாநிலங்களுக்கிடையேயான மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான சாலைப் பயணங்களுக்கான E-Pass முறையை அரசாங்கம் ரத்து செய்து விட்டாலும், ஊட்டி, நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏர்காட் ஆகிய இடங்களுக்கு வருபவர்களுக்கு E-Pass கட்டாயத் தேவையாக உள்ளது.

சுற்றுலாப் பிரதேசமான கொடைக்கானல் திறக்கப்படுவது அங்குள்ள மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை நம்பி பல சிறு வணிகர்கள் இருக்கும் கொடைக்கானலில் இந்த அறிவிப்பு, ஒரு பெரிய மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். ஏனெனில் கொரோனாவால் ஸ்தம்பித்து விட்ட அவர்களது வாழ்வாதாரத்தை அவர்கள் இனிதான் மீட்டெடுக்க வேண்டும்.

மொத்தத்தில் கொடைக்கானல் செல்ல காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்காகக் காத்திருக்கும் கொடைகானலுக்கும் இது ஒரு நல்ல செய்தியாகும்!!

ALSO READ: Sep 7 முதல் மாநிலத்திற்குள் பயணிகள் ரயில்கள், தனியார் பேருந்துகளுக்கு அனுமதி: EPS

More Stories

Trending News