சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை (இ-பட்ஜெட்) இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இ-பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணி முதல் நிதிநிலை அறிக்கை குறித்து பேசினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் மெட்ரோ, மாநில சாலைகள், பேருந்துகள் குறித்த அறிவிப்பிகளும் வெளியாகி உள்ளது. 


நாட்டிலேயே அதிக தார் சாலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான்.  தற்போது புறவழிச்சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளில் புறவழிச்சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.  


சென்னை  மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கோடம்பாக்கம் - பூந்தமல்லி மெட்ரோ சேவை 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும்.  


மெட்ரோ ரயில் திட்டத்தை தாம்பரம் வழியாக விமான  நிலையத்தில் இருந்து கிளம்பாக்கம் பேருந்து முணையம் வரை நீட்டிக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிகள் அனைத்தும் 2026ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 


மேலும் பட்ஜெட்டி உரையில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். விரைவில் அதற்கான அறிக்கைகள் தயார் செய்யப்படும் என்று கூறினார். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது தொடர்பாக ஒன்றிய அரசிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.


ரூ.623 கோடியில் 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் வாங்கப்படும் என்று அறிவித்தார் பழனிவேல் தியாகராஜன். மேலும், மகளிர் இலவச பயணத்திற்கு ரூ.703 கோடியும், போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் மானியமாக ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  


மேலும், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் 3 இடங்களில் ரூ.335 கோடி செலவில் மேம்பாலங்கள் அமைக்கப்படும் என  பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு ரூ.2,056 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்வழிகளில் கழிவுநீர் தடுப்பு அமைக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR