கொடநாடு வழக்கு மறு விசாரணைக்கு தடை இல்லை - உச்சநீதிமன்றம்
![கொடநாடு வழக்கு மறு விசாரணைக்கு தடை இல்லை - உச்சநீதிமன்றம் கொடநாடு வழக்கு மறு விசாரணைக்கு தடை இல்லை - உச்சநீதிமன்றம்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2021/09/07/197203-1-1548417073.jpg?itok=iLV7fWhI)
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் காவல்துறை மறுவிசாரணைக்கு எந்த தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் காவல்துறையினர் மறுவிசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் 29ம் தேதி வழக்கின் காவல்துறை சாட்சியான கோவையை சேர்ந்த அனுபவ் ரவி மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், ஏற்கனவே இந்த வழக்கில் 41 காவல்துறை சாட்சிகள் விசாரித்து முடிக்கப்பட்டு, குற்றவாளியிடம் குறுக்கு விசாரணையும் முடிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், மீண்டும் தன்னிடம் காவல்துறையினர் மறுவிசாரணை நடத்தி வருகின்றனர் எனவும், இது சட்டத்துக்கு புறம்பானது, காவல்துறையினரின் மறுவிசாரணையில் உள்நோக்கம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அதேபோல இந்த வழக்கில் தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் இவர் குறிப்பிட்டிருந்தார். எனவே இந்த வழக்கை விரைந்து முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிடுவதுடன், தற்போது நடைபெறும் காவல்துறை மறுவிசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், விக்ரம் நாத், ஹிமா கோலி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரான அனுபவ் ரவி தரப்பில், ஒரு வழக்கில் மறுவிசாரணை என்பது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இவ்வழக்கில் அவ்வாறு விதிமுறை ஏதும் பிப்பற்றப்படவில்லை மேலும், இவ்வழக்கில் காவல்துறையினர் விசாரணை நடத்தி கொண்டே சென்றால் இந்த வழக்கு ஒரு முடிவில்லாமல் போய்கொண்டே இருக்கும், ஆகவே கோடநாடு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வாதம் முன்வைக்கப்பட்டது.
தற்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பதால் அரசியல் காரணங்களுக்காக இவ்விவகரம் முக்கியத்துவம் பெற்று உள்ளதாகவும் அனுபவ் ரவி தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் மறுவிசாரனைக்கு எந்த தடையும் விதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் தற்போது உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.
ALSO READ கொடநாடு எஸ்டேட் மேல் ட்ரோன் பறக்கத் தடை!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR