கொடுங்கையூர் கொடூரம்: தமிழக அரசு 10 லட்சம் நிதியுதவி!!
![கொடுங்கையூர் கொடூரம்: தமிழக அரசு 10 லட்சம் நிதியுதவி!! கொடுங்கையூர் கொடூரம்: தமிழக அரசு 10 லட்சம் நிதியுதவி!!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/11/03/120820-120571-tn-cm-eda.jpg?itok=-4E5K-HQ)
சென்னை கொடுங்கையூரில் சாலையில் கனமழையால் காரணமாக வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நின்றதில், அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கியதில் இரு சிறுமிகள் (யுவஸ்ரீ, பாவனா) உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 2 சிறுமிகளின் (யுவஸ்ரீ, பாவனா) குடும்பத்துக்கும் தலா 10 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.