கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு 2ம் நாளாக தடை!
கனமழை, பலத்த காற்று வீசுவதால் பாதுகாப்பு கருதி கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 2ம் நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது!
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சுற்றுலா தளங்களான ஒகேனக்கல், கோவை குற்றாலம், குற்றாலம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தொடர்ந்து 3 ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கனமழை, பலத்த காற்று வீசுவதால் பாதுகாப்பு கருதி குற்றாலம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு 2ம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.