சென்னை: கொரோனா காலம் நமக்கு பல பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டோம். உணவு, பள்ளி, கல்வி, தொழில், கேளிக்கை என வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நாம் மாற்றங்களைக் கண்டுள்ளோம். இப்போது லாக்டௌன்தான் அகற்றப்பட்டுள்ளதே தவிர தொற்று இன்னும் முற்றிலுமாக தொலைந்து போகவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த இக்கட்டான நிலையில், ஷாப்பிங் என்ற பெயரில் வீதிகளில் உலவும் மக்களைப் பார்த்தால் அச்சம் நம்மை பற்றிக்கொள்கிறது. எது தேவை என்று நம்மால் முன்னுரிமைப்படுத்த முடியவில்லையா என்ற கேள்வியே மேலோங்கி நிற்கிறது. இன்று சென்னையில் நடந்த சம்பவம் நம் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை.


ALSO READ: COVID-19 in Tamil Nadu: இன்று 3094 பேருக்கு கொரோனா உறுதி; 50 பேர் மரணம்


COVID-19 பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதற்காக சென்னையில் உள்ள ஒரு பிரபலமான ஜவுளி ஷோரூமுக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.


கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (Greater Chennai Corporation), டி.நகரில் உள்ள பிரபல துணிக் கடைகளில் ஒன்றான குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல் வைத்தது.


இந்தக் கடையில் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் கூடியுள்ளதையும், COVID-19 நெறிமுறைகள் (COVID-19 Guidelines) எதுவும் பின்பற்றப்படாததையும் காண்பிக்கும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. இதைத் தொடர்ந்து கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் இந்த நடவடிக்கையை எடுத்தது.


நகரின் குடிமை அமைப்பின் அறிக்கையின்படி, இக்கடையில் COVID நெறிமுறைகள் பின்பற்றப்படாததாலும், அதிக மக்கள் கூட்டமாக அனுமதிக்கப்பட்டதாலும், கடை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.


சென்னை கார்ப்பரேஷன் ஒரு ட்வீட் மூலம், நெறிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று கூறியதோடு, கடை உரிமையாளர்களிடமும் பொதுமக்களிடமும் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு கோரியுள்ளது.



இந்த பண்டிகை காலத்தில், அதிக அளவில் மக்கள் கடைகளுக்கு வருகிறார்கள். இதை கடைகளால் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அனைத்து நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் ஒருபுறம் இருக்க, மக்களும் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். இன்று அந்த கடையில் ஒருவருக்கு தொற்று இருந்திருந்தால் கூட, அவர் மூலம் எத்தனை பேருக்கு அது பரவியிருக்கக்கூடும்?


நமக்கு பழக்கப்பட்ட பல விஷயங்களை நாம் விட்டுக்கொடுத்தோம், அமைதி காத்தோம். எதற்காக இதையெல்லாம் செய்தோமோ அது இன்னும் ஓய்ந்து விடவில்லை. கொரோனா இன்னும் குறைந்து விடவில்லை. அந்த கவனம் நம் அனைவருக்கும் எப்போதும் கண்டிப்பாக இருக்க வேண்டும். 


ALSO READ: COVID தொற்றால் கண் பார்வை கோளாறு ஏற்பட்ட முதல் நோயாளி பற்றி AIIMS பகீர் தகவல்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR