காட்டுத் தீயில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஓபிஎஸ் ஆறுதல்
போடி குரங்கணியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட 36 பேர் காட்டுத்தீயில் சிக்கினர். இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதி நபர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
போடி குரங்கணியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட 36 பேர் காட்டுத்தீயில் சிக்கினர். இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதி நபர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
கோவை, ஈரோடு, சென்னை பகுதிகளில் இருந்து தனியார் நிறுவனத்தில் டிரக்கிங் கிளப் மூலம் மொத்தம் 36 பேர் தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் காட்டு தீ பரவியதால் அவர்கள் வெளியேற முடியாமல் திணறினர். இதை சாட்டிலைட் மூலம் கொடைக்கானல் வனத்துறையினர் கண்டுபிடித்து தேனி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து வனத்துறை, தீயணைப்பு துறையினர் உஷார் படுத்தப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம்:- தேனி மாவட்ட கலெக்டர் ஆகியோர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு நடவடிக்களை துரிதப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மீட்கப்பட்டனர்கள் குரங்கணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறனர். மேலும் மீட்புபணி தொடர்ந்து நடந்து வருகிறது.