இந்த முறை உங்களுக்கு சீட் கிடைக்குமா? குஷ்பூ கொடுத்த ரியாக்ஷன்
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை என தெரிவித்த குஷ்பூ, நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
கோவில்களை சுத்தம் செய்ய வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சுத்தப்படுத்தும் பணியை நடிகையும், பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ பேசுகையில், கோவிலை சுத்தம் செய்வது புதிதல்ல. ஒவ்வொரு பகுதியிலும் கோயில்களை சுத்தம் செய்தால் நம்மை பார்த்து மற்றவர்களும் சுத்தம் செய்ய வருவார்கள். இன்றைக்கு நாட்டில் கோயில்களுக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறோம். நம் கலாச்சாரம், நம் பாரம்பரியம் அது தான்.
மோடி அதை துவக்கி வைத்தார். ஸ்வச் பாரத் ஏற்கனவே இருக்கிறது. கோயிலில் பல இடங்களில் அசுத்தமாக இருக்கிறது. கோயிலை சுத்தமாக வைத்தால் நாம் கோயிலுக்கு போகும் போது நிம்மதி கிடைக்கும். இது இன்றைக்கு இந்த ஒரு கோயிலுடன் நிற்கப் போவதில்லை. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் சுத்தம் செய்வோம். கோயில் கோயில் தான். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை. இங்கு நிறைய வேலை இருக்கிறது. 500 ஆண்டுகளாக ராமர் மறுபடியும் வரமாட்டாரா என்று காத்திருக்கிறோம். பிரதமர் மோடியின் ஆட்சியில் ராமரை மறுபடியும் ஒரு இடத்தில் பார்க்க போகிறோம்.
மேலும் படிக்க | எம்ஜிஆர் போட்ட பிச்சையினால் தான் கருணாநிதி முதல்வர் ஆனார் - கடம்பூர் ராஜூ!
ரொம்ப பெருமையாக, சந்தோஷமாக இருக்கிறது. ராமர் கோயிலை பொறுத்தவரை சாதி மதம் கிடையாது. முழுக்க முழுக்க நம் ஒற்றுமையை காட்ட தான் மந்திரம் சொல்கிறோம். அயோத்தியில் இந்து, முஸ்லிம் என எல்லா மதத்தினரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி ராமரை வரவேற்க காத்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் இந்தியர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அவர்கள் இதை கொண்டாடுகிறார்கள். இது மிகப்பெரிய விஷயம். தாய்மார்கள் மற்றும் பெரியோர்கள் ஆசிர்வாதத்துடன் தான் மோடி இருக்கிறார். நாட்டையும் என்னையும் பொறுத்தவரை ராமர் கோயில் நம் ஒற்றுமை என்றார்.
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசியவர், ஆளும் கட்சியான திமுகவினர் வீட்டிலேயே உள்ள சிறுமிக்கு கொடுமை நடந்திருக்கிறது. வெளியே வந்து அந்த காயங்களை காட்டியதாகவும், ஆளுங்கட்சியினர் வீட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், தமிழ்நாட்டில் எங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும்?. விழுப்புரத்தில் 10 வது படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர் மூலம் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறிய குஷ்பூ, எப்.ஐ.ஆர் எதுவும் பதிவு செய்யவில்லை. அவர்கள் என்னிடம் பேசி நான் நடவடிக்கை எடுக்க முயன்று வருகிறேன் என்றும், நீங்கள் கேஸ் வாபஸ் வாங்குங்கள் என்று அவர்களை மிரட்டுகிறார்கள். பேரம் பேசுகிறார்கள்.
திமுகவிற்கு மட்டும் இன்றி இங்குள்ள அனைவருக்கும் தெரியும் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று. இது முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தெரியும். கருணாநிதி பிரச்சினையை பார்த்து விட்டும் எந்த வித நடவடிக்கை எடுக்க போகிறார்? அவர்கள் கட்சியினர் வீட்டிலேயே ஒரு பெண்ணுக்கு கொடுமை நடந்திருக்கிறது என்றும் முதலமைச்சர் இதை பற்றி எதுவும் பேசினாரா? ஆறுதல் சொன்னாரா ? இது தவறு. நடந்திருக்க கூடாது. நான் அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று எதுவும் சொன்னாரா?.
இதுவரைக்கும் முதலமைச்சர் வெளியே வந்து பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு பெண்களுக்கு ஆதரவாக பேசி நான் பார்த்தது இல்லை என்றும் சிறுமி என்பதால் இது போக்சோவில் தானே வரும். மகளிர் ஆணையத்தில் வராது எனவும், எங்கள் கமிட்டியில் நிறைய புகார்கள் வருகிறது. உண்மையான வழக்குக்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனக்கு கீழ் 5 மாநிலங்கள் வருகிறது. அதிலிருந்து நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 100 புகார் வந்துடும். அதில் எங்களுக்கு ஒரு கமிட்டி இருக்கிறது. விசாரணை அதிகாரிகள் பார்த்து விட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கடந்த 2 வருடத்தில் 720 புகார்கள் / வழக்குகள் தமிழகத்தில் கொடுத்திருந்தேன் என்றும் நிறைய வழக்குக்கு தீர்வு காண்பதாகவும் கூறினார்.
அதிகமான புகார்கள் பீஹார் மற்றும் ஆந்திராவில் தான் இருக்கிறது. எங்களுக்கு அதிகமாக வரும் புகார்கள் இங்கிருந்து தான் வருகிறது என்றும் தமிழ்நாட்டில் புகார்கள் வர தான் செய்கிறது. பெண்கள் இன்னும் பயத்துடன் தான் இருக்கிறார்கள் எனவும் கூறினார். பாஜக தமிழகத்தில் வளர்ந்து இருக்கிறது. வெற்றி பெறுபவர்கள் பட்டியலில் பாஜக இருக்கிறது. பாஜக தமிழகத்தில் வளர்ந்துள்ளது. தமிழகத்தில் எதிர்கட்சி என்றாலே பாஜக என்று பார்க்கிறார்கள். தமிழகத்தில் மிக பெரிய இடத்தில் பாஜக உள்ளது. காயத்ரி ரகுராம் அதிமுகவில் சேர்ந்ததை பற்றி எதுவும் நினைக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும், தேர்தலில் நிற்பது குறித்து பேசியவர், தேர்தல் குறித்து தலைமையின் முடிவு தான் என் முடிவாக இருக்கும். கட்சியை பொறுத்தவரை எங்கள் விருப்பம், 2024 ல் மிகப்பெரிய வெற்றி பாஜகவுக்கு காத்திருக்கிறது. அதற்கு எங்களால் எந்த அளவுக்கு உழைக்க முடியுமோ உழைப்போம். யார் எங்கே போட்டியிட வேண்டும் என்ற மேலிடம் தான் முடிவு செய்யும் என்று குஷ்பூ கூறினார்.
மேலும் படிக்க | பிரதமர் மோடி வருகை 3 நகரங்களில் இதை செய்யக்கூடாது...! அதிரடி உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ