முட்டாள்தனமாக பேசுகிறார், உளறுகிறார் ஆளுநர் ஆர்என் ரவி - ராசா எம்பி விளாசல்

MP A. Raja, Governor R.N. Ravi : தமிழ்நாடு கல்வித்தரம் குறித்து ஆளுநர் ஆர்என் ரவி கூறுவது முட்டாள்தனமானது என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 7, 2024, 10:26 AM IST
  • முட்டாள்தனமாக பேசுகிறார் ஆளுநர் ரவி
  • அவர் உளறுவதற்கு முக்கியவதும் தேவையில்லை
  • ஆ ராசா எம்பி கடும் விமர்சனம்
முட்டாள்தனமாக பேசுகிறார், உளறுகிறார் ஆளுநர் ஆர்என் ரவி - ராசா எம்பி விளாசல் title=

தமிழ்நாட்டின் கல்வித் தரம் மோசமாக இருக்கிறது என ஆளுநர் ஆர்என் ரவி அண்மையில் பேசினார். கல்வி தரத்தில் தேசிய சராசரியை விட மாநில கல்வி சராசரி கீழே போய்விட்டதாகவும், தமிழ்நாட்டின் பாடத்திட்டம் மோசமாக இருப்பதாகவும் விமர்சித்தார். அதற்கு திமுக துணைப்பொதுச்செயலாளர், நீலகிரி எம்பி ஆ. ராசா காட்டமாக பதில் அளித்துள்ளார். ஆளுநர் ஆர் என் ரவி முட்டாள்தனமாக தினம் ஒன்று பேசிக் கொண்டிருப்பதாகவும், அவர் உளறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ. ராசா பேசும்போது, " ஆளுநரோட கல்வித் தரம் என்ன?, தமிழ்நாட்டில் 1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு படிப்பறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையும், உயர்கல்விக்கு செல்பவர்களின் எண்ணிகைகயும், மருத்துவர்கள், என்ஜினியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதிலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை அதிகம் என்பதற்கு மத்திய அரசின் சான்றுகளே இருக்கின்றன. இந்த ஆவணங்களை எல்லாம் பரிசீலிக்காமல் அரசியல் உள்நோக்கத்தோடு கோமாளித்தனமாக அவ்வப்போது இப்படி பேசிக் கொண்டே இருக்கிறார். அவர் உளறுவதையெல்லாம் இப்போது நான் படிப்பதே இல்லை. ஆளுநர் ஆர்என் ரவி செய்தி என்றால் நான் முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை. 

மேலும் படிக்க | சொத்துகுவிப்பு வழக்குகள்: 2 அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு தடை - உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?

அவர் முட்டாள்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார். உளறிக் கொண்டிருக்கிறார். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. பத்திரிக்கைகளும் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். அவர் அரசியல் செய்கிறார் என்று கூட சொல்லமாட்டேன். அரசியலமைப்பில் உயர்ந்த பொறுப்பில் இருக்கக்கூடிய சிறிய மனிதர் அவர்" என்று காட்டமாக விமர்சித்தார். அதாவது, மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்றால் தான் நிதி ஒதுக்கவேன் என கூறி தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. தமிழ்நாடு அரசோ, இரு மொழிக் கொள்கையில் விடாப்பிடியாக இருப்பதாகவும், மத்திய அரசின் கல்விக் கொள்கையைக் காட்டிலும் தமிழ்நாட்டில் எல்லா விதங்களிலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த கல்விக் கொள்கையை ஏற்குமாறு வற்புறுத்துவதை நாங்கள் ஏற்கமாட்டோம் என்றும் தெரிவித்து வருகிறது. 

இந்த கொள்கை முடிவு மத்திய மாநில அரசுகளுக்கு இடையே மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தை வைத்து தான் ஆளுநர் தெரிவித்த கருத்துக்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா கடுமையாக விமர்சித்து பேட்டி கொடுத்திருக்கிறார். 

மேலும் படிக்க | கிசுகிசு : பரவும் காவிமயம்... தூங்கும் ஈரோட்டு இயக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News