குவைத் நாட்டின் மங்காப் நகரில் உள்ள 6 மாடி கட்டடத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதில் தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் விழுப்புரம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு குவைத் தீ விபத்து குறித்து அமைச்சர் வெளியிட்டிருக்கும் தகவலில், இதுவரை 5 தமிழர்கள் உயிரிழந்திருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார். வீராசாமி மாரியப்பன், கருப்பணன், புனாஃப் ரிச்சர்டு ராய், சின்னத்துரை, முகமது ஷெரீப் என அவர்களின் பெயர் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | எல்லாம் ஓகே தான்! செய்தியாளர்களுக்கு தம்ஸ்-அப் காட்டி எஸ்கேப் ஆன தமிழிசை!


இந்த தீ விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குவைத் நாட்டின் மங்காப்  நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்:


இந்தியாவிற்குள்: +91 1800 309 3793


வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901


-என கூறியுள்ளார். இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரும் குவைத் தீ விபத்து குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய தூதரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவும் வகையில் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்தவர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | இந்து உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்...மதம் தாண்டி நிலை நிற்கும் மனிதம்...!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ