வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன் (33) என்பவர் திருமணமாகி கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் வீட்டை விட்டு வெளியே வந்து அனாதையாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சரவணன் மன உளைச்சலில் இருந்ததாகவும் அவர் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சைக்கி பின்னர் அரசு மருத்துவமனைக்கு வெளியே தங்கி அனாதையாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சரவணன் உடல் நலம் குறைவால் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு வெளியே இறந்து விட்டார். பின்னர் அவர் உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சரவணனின் உறவினரான தனகோட்டி என்பவர் பேரணாம்பட்டு பகுதியில் உள்ள மஜ்ஜிதே சேவை குழுவைச் சேர்ந்த இஸ்லாமியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக மஜ்ஜிதே சேவை குழுவைச் சேர்ந்த சரவணனின் உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்தனர். இஸ்லாமியர்களின் இந்த செயல் அப்பகுதியில் உள்ள இந்துக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மதம் என்ற கோட்பாட்டில் மனிதர்களை பிரிக்க நினைத்தாலும் இன்றும் மதத்தைத் தாண்டி மானுடம் நிலைத்து நிற்கின்றது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்
மேலும் படிக்க | பிரபல நடிகர் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் இளம் பெண் தற்கொலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ