KYNHOOD Technologies, நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட KYN செயலி, இளைய தலைமுறைக்கான சமூக வலைதள ஊடகமாக அறியப்படுகிறது. இந்த செயலி கடந்த பிப்ரவரி 2024ல் வெளியாகி, ஆறு மாதங்களில் இதுவரை 5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது ஹைப்பர்லோக்கல் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி, பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. KYN செயலி தொலைக்காட்சி, அச்சு, காட்சி மற்றும் சமூக வலைதள ஊடகங்களின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஹைப்பர் லோக்கல் சமூகங்களுக்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது முதல்கட்டமாக சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

“இந்த செயலி மூலம், பெரு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை திட்டமிட்டு, தேவையான மக்களிடையே கொண்டு செல்ல முடியும். இது பெரு நிறுவனங்கள் மட்டுமில்லாது, சிறு, குறு நிறுவனங்கள், புதிய தொழில்முனைவோர் தங்களது தேவைக்கு ஏற்ப சரியான நுகர்வோரைத் தேர்ந்தெடுத்து விளம்பரப்படுத்த முடியும். இது மட்டுமில்லாது KYN செயலியில், பயனாளர்களும் தங்களது பதிவுகளை இடவும், தங்களது திறமைகளை வெளிக்காட்டவும் வசதிகள் உள்ளது. மேலும் இந்த செயலியில், பயனாளர்கள் தாங்கள் வாழும் பகுதியில் இருந்துதரமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் தகவல்களைப் பெற முடியும்” என்று KYN செயலியின் தலைமை செயல் அதிகாரி காயத்ரி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | 1.5 லட்சம் மின் மீட்டர்கள் மாற்றம் என மின்சார வாரியத்தின் அதிரடி அறிவிப்பு


அதன்படி, கடந்த ஆறு மாதங்களில் KYN செயலி பல்வேறு சாதனை மைல்கல்களை கடந்துள்ளது. உதாரணமாக, KYNல் இதுவரை விளையாட்டு, பொழுதுபோக்கு, பேஷன், உணவு, லைஃப் ஸ்டைல், சாதனை மனிதர்கள், நிகழ்வுகள், கடைகள் உள்ளிட்ட தலைப்புகளில் சென்னையில் இருக்கும் 19 மண்டலங்களில் இருந்து, 20 ஆயிரத்துக்கும் அதிகமான Hyperlocal Content பதிவு செய்யப்பட்டுள்ளது, அதில் 3000க்கும் அதிகமான ஹைப்பர் லோக்கல் துணுக்குகள் வெளியாகி உள்ளன. அதேபோல், பொழுதுபோக்கை மையப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் KYN செயலியில் வெளியாகி வருகிறது. சென்னையின் உணவு வகைகளை தேடிச் செல்லும் Chennai On Plates நிகழ்ச்சியை யூட்யூப் பிரபலமும், சமையல் வல்லுநருமான செஃப் தீனா தொகுத்து வழங்கி உள்ளார். 


GenZ தலைமுறையினரின் வாழ்வியலை மையமாக வைத்து உருவான, மெட்ராஸ் சிங்காரி நிகழ்ச்சியினை யூட்யூப் பிரபலமான பூஜா சங்கர் தொகுத்தி வழங்கி உள்ளார். இவை இரண்டும் 8 பகுதிகள் வெளியாகி பல லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்துள்ளது. பிட்னெஸை மையப்படுத்தி உருவாகியுள்ள நிகழ்ச்சியான, Fit O Fit நிகழ்ச்சியினை சின்னத்திரை நடிகை பஃரினா ஆஸாத் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல், பிரபலங்கள் கலந்துகொண்டு சென்னையைப் பற்றிய தங்களது நினைவுகளைப் பற்றியும், தங்களைப் பற்றியும் பேசும் நேர்காணல் நிகழ்ச்சியான The Local Showவும் வெளியாகி வருகிறது. மேற்சொன்ன நிகழ்ச்சிகள் அனைத்தும் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது.


இதுமட்டுமில்லாமல் சென்னையில் இருந்து மட்டும், 150க்கும் அதிகமான ஹைப்பர்லோக்கல் இன்ப்ளூயன்சர்ஸ், 1100க்கும் அதிகமான ஹைப்பர்லோக்கல் கடைகள் இதுவரை KYN செயலியில், On Board செய்யப்பட்டு பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைதள பக்கங்களில் KYNஐ இதுவரை 75,000க்கும் அதிகமான மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இதுமட்டுமில்லாமல் நேரடியாக மக்களைச் சென்று சேரும் வகையில், REP(Resident Engagement Program), CEP(Corporate Engagement Program), KYN KARNIVAL என பல்வேறு நிகழ்வுகளையும் KYN நடத்தி வருகிறது. இவற்றிற்கு எல்லாம் மணிமகுடமாக, KYN Karnival என்கிற நிகழ்வையும் நடத்தி வருகிறது KYN. இந்த கார்னிவல் நிகழ்ச்சி சென்னையை கொண்டாடவும், நம்முள்ளே இருக்கும் திறமையாளர்களை அடையாளம் காணவும், சாதனை – சமூக சேவர்களை ஊக்குவிக்கவும், தொழில்முனைவோர்களுக்கு தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும் உதவும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.


இதன் மூலம் மேற்சொன்னது போல, சென்னையின் ஹைப்பர் லோக்கல் செயலியாக உருவெடுத்துள்ளது KYN. பல்வேறு திறமையாளர்கள், தொழில்முனைவோர், பொழுதுபோக்கு என பல்வேறு அம்சங்களை வெளிக்கொண்டுவந்துள்ளது KYN. இதன் மூலம் Namma Area, Namma Pride, Namma App என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்தி உள்ளது. மேலும் வரும் பருவ மழைக்கான சென்னை மாநகராட்சியின் ‘Namma Chennai Safe Chennai’ என்கிற முன்னெடுப்பிலும் KYN இணைந்துள்ளது. தன்னார்வலர்களை இணைக்கும் இந்த முன்னெடுப்பில் KYN hyperlocal communication partner ஆக இடம் பெற்றுள்ளது.


மேலும் படிக்க | Ration Card : ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில் குட்நியூஸ் அறிவிக்கிறது தமிழக அரசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ