சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கான நிலம் சட்டத்துக்குட்பட்டே கையகப்படுத்தப்படுகிறது என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலை ரூ.10,000 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நில அளவீடு பணிகள் முடிவுற்ற நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 


இத்திட்டத்திற்கு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், நில உரிமையாளர் கிருஷ்ண மூர்த்தி,பாமக எம்.பி.அன்பு மணி ராமதாஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்புராயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. 


இன்று நடந்த விசாரணையில் மத்திய அரசு தரப்பு தனது வாதத்தை முன்வைத்தது. அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதிடுகையில், "சுற்றுசூழல் அனுமதி பெற்றே சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விதிகளை மீறி திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று யூகத்தின் அடிப்படையிலே கூறுகிறார்கள். மக்களுக்கு அவசியமான திட்டம் என்பதாலே இதனை அரசு செயல்படுத்துகிறது. யூகத்தின் அடிப்படையில் வழக்குகள் தொடர முடியாது என்பதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றார். 


மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சட்டப்படியே நிலம்கையகப்படுத்தப்படுவதாகவும், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறாமல் எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியாது என குறிப்பிட்டார். மேலும், அரசு அனைத்து விதிகளையும் மீறும் என யுகத்தின் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது என்றும் தெரிவித்த அவர் , நில அளவீட்டு பணிகளை மேற்கொள்ளாமல் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற முடியாது என தெரிவித்தார்.