ஆன்மீக பூமி, பாலியல் பூமியாக மாறிவிட்டதாக உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

60 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதி கிருபாகரன், காணொலி காட்சி மூலம் விசாரித்தார். அப்போது மத்திய அரசு தரப்பில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து உரிய பதிலளிக்கவில்லை. இது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி கிருபாகரன்,


அடுத்த விசாரணையின்போது, இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்காவிட்டால், மத்திய உள்துறை மற்றும் மாநில உள்துறை செயலாளர்களும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறைச் செயலாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி வரும் எனவும் எச்சரித்தார். மேலும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அத்துடன் ஆன்மீக பூமி என்றழைக்கப்பட்ட இந்தியா, பாலியல் வன்கொடுமை பூமி என்ற அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டது என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்தார்.