கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி விழா!
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு, திருநாள் நிகழ்ச்சி இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு, திருநாள் நிகழ்ச்சி இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது
குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு இன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையில் உள்ள பழமையான புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் நான்கு கிலோமீட்டர் தூரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் குருத்தோலை கையில் ஏந்தி பவனியாக ஊர்வலம் வந்து தேவாலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர் .
வண்ணாரப்பேட்டை ஆரோக்கியநதர் ஆலயம் பங்குத்தந்தை வர்கீஸ் ரோசாரியோ தலைமையில் 1000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு ஆராதனையில் ஈடுபட்டனர். குருத்தோலை முக்கிய பிரார்த்தனையின் போது வருகின்ற 19 ஆம் தேதி நடக்கக்கூடிய தேர்தலில் (Loksabha Election 2024) அனைவரும் தவறாமல் வாக்களிக்கவும் என பங்குத் தந்தை கிறிஸ்தவ பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
கோவையிலும், பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். கோவை காந்திபுரம் சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் சார்பில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் ஆலயம் முன்பாக துவங்கியது. இதில், ஆயர் தலைவர் டேவிட் பர்னபாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயச்சந்திரன் பொருளாளர் ரவி இன்பசிங்,உதவி ஆயர் சாம் ஜெபசுந்தர்,சபை ஊழியர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காந்திபுரம் சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில், ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் குருத்தோலைகளை கையில் ஏந்திக்கொண்டு ஓசன்னா ஓசன்னா எனும் இயேசுவின் திரு நாமத்தை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.
மேலும் படிக்க | திமுக அதிமுக இடையே போட்டி... அண்ணாமலை ஜெயிக்க மாட்டார் - எஸ். பி. வேலுமணி தடாலடி
ஊர்வலம் ஐந்தாவது வீதி மற்றும் முக்கிய வீதி வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. வருகிற 29 ந் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்பட உள்ள நிலையில்,அதைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை 31ம் தேதி இயேசு உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் ஈஸ்டர் பண்டிகை தேவாலயங்களில் கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடதக்கது.
இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படும் தவக்காலம், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி துவங்கியது. 40 நாட்கள் அனுசரிக்கப்படும் தவக்காலத்தில், இயேசுவின் சிலுவை மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய கடைசி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தப் புனித வாரத்தின் முதல்நாள் குருத்தோலை ஞாயிறு எனப்படுகிறது.இந்த நாளன்று கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலையை ஏந்தியவாறு ஊர்வலமாக செல்வர்.
மேலும் படிக்க | தமிழகத்திற்கு மோடி 100 முறை வந்தாலும் பாஜக மண்ணை தான் கவ்வும் - திமுக
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ