சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து!
Woman Stabbed in Guindy Railway Station News In Tamil : சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
Woman Stabbed in Guindy Railway Station News In Tamil : சென்னை கிண்டி ரயில் நிலைய நடைமடையில் ஒன்றில் பெண் ஒருவரிடம் ஆண் நபர் ஒருவர் வெகுநேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார், திடீரென அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணை கழுத்தில் குத்தியுள்ளார்,
இதையடுத்து அந்த பெண் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடி உள்ளார். அப்போதும் விடாமல் அந்த நபர் அந்த பெண்ணை துரத்தி துரத்தி கத்தியால் குத்தி உள்ளார்.இதனை கண்ட பொதுமக்கள் அருகில் உள்ள நடைமேடியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற ரயில்வே போலீசார் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த அந்தப் பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்படை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க | சவுக்கு சங்கர் அவதூறு கருத்துகளை தெரிவிக்க தடை! லைகா வழக்கில் உத்தரவு
மேலும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்த அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சென்னை பாரிமுனை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பதும் காயம் அடைந்தவர் அவரது மனைவி பானுமதி என்பதும் தெரியவந்துள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்படுத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது மனைவியை ழுத்து கை வயிறு பகுதியில் குத்தியதாக தெரிவித்துள்ளாரர்.
இதையடுத்து மாம்பலம் ரயில்வே போலீசார் வெங்கடேசனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் சம்பவம் நடைபெறும்போது அந்த நடைமேடையில் போலீசார் யாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ