10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்…
10th Exam Result : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதை தொடர்ந்து, இதை எந்த தளத்தில் பார்க்கலாம் என்ற விவரத்தை இங்கு பார்க்கலாம்.
10th Exam Result : சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பார்க்க..
>tnresults.nic.in இணையதளத்தை தேடவேண்டும்
>SSLC Exam Results May 2024 எனும் லிங்கை.
>உள் நுழைவதற்கான log in லிங்க் கிடைக்கும்.
>உங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி-வருடத்தை குறிப்பிடவும்.
>உங்களது தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும், இதை ஸ்கிரீன் ஷாட் அல்லது பிடிஎஃபாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | TN 12th results 2024 Updates: 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
மாணவிகளே அதிக தேர்ச்சி:
இந்த வருடம் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 91.55% தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, மொத்தம் 4, 22,592 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் எழுதியிருக்கின்றன. இதில் வழக்கம் போல மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 0.16 சதவிகிதம் அதிகமாக இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்திருக்கிறது. மொத்தம், 8.18 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை விட, மாணவிகள், 5.95 சதவிகிதம் அதிகமான தேர்ச்சி விகிதத்தை பெற்றிருக்கின்றனர்.
அரியலூர் மாவட்டம் முதலிடம்:
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.31% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 97.02% தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடமும், 96.36% தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.
பாட வாரியான தேர்ச்சி விகிதம்:
தமிழ் மற்றும் இதர மொழி பாடங்களில் மொத்தம் 96.85 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றன. ஆங்கிலத்தில், 99.15 சதவிகிதம் பேரும், கணிதத்தில் 96.78 சதவிகிதம் பேரும், அறிவியலில் 96.72 சதவிகிதம் பேரும், சமூக அறிவியலில் 95.74 சதவிகிதம் பேரும் தேர்ச்சி விகிதத்தை அடைந்திருக்கின்றனர்.
முழு மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை:
தமிழ் மொழி பாடத்தில் மொத்தம் 8 பேர் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர். அங்கிலத்தில் 415 பேரும், கணிதத்தில் 20691 பேரும், அறிவியலில் 5104 பேரும் சமூக அறிவியலில் 4428 பேரும் சதம் அடித்திருக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ