விசிக-விலிருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்!! அதிரடி காட்டிய திருமா..
Latest News Aadhav Arjuna Suspended From VCK : சமீபத்தில் நடந்த அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில், ஆதவ் அர்ஜுனா சர்ச்சையாக பேசியதை தொடர்ந்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
Latest News Aadhav Arjuna Suspended From VCK : விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் நடந்த அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திமுக கட்சி குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, விசிக தலைவர் திருமாவளவன் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
அவர் பின்வருமாறு தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்:
ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு
1. கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.
2. இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
3. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
5. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
6. அதன்படி, திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
என்ன பிரச்சனை?
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா, கடந்த சில நாட்களாகவே கூட்டணி கட்சியாக இருக்கும் திமுக கட்சிக்கு எதிரான கருத்துகளை பல்வேறு இடங்களில் பேசி வந்தார். கடந்த 6ஆம் தேதியன்று, அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய் கலந்து கொண்டார். இந்த விழாவில் திருமாவளவனும் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், இருவரும் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டால், ஊடகத்தினர் பல்வேறு கதைகளை ஜோடிப்பர் என்று கூறி, விமர்சனங்களை தவிர்ப்பதற்காக திருமாவளவன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறிவிட்டார்.
இந்த விழாவில் ஆதவ் அர்ஜுனா தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுவதாக கூறினார். தான் இருக்கும் கூட்டணி கட்சி குறித்து இவர் தொடர்ந்து சில நாட்களாக இவ்வாறான கருத்துகளை கூறி வந்ததை அடுத்து, இந்த விழாவில் அவர் பேசியது ஹைலைட் ஆக மாறியது. இதையடுத்து இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க | “நான் பலவீனமானவன் அல்ல..” விஜய் பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி!
மேலும் படிக்க | விஜய்க்கு அந்த நோக்கம் இருக்கத்தான் செய்யும் - மதுரையில் திருமா பேட்டி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ