Actress Trisha Send Lawyer Notice to ADMK AV Raju : முன்னாள் அதிமுக சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு, சில நாட்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்துகள் பேசியதை அடுத்து, அவருக்கு நடிகை த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

த்ரிஷாவின் ட்விட்டர் எக்ஸ் தள பதிவு:


நடிகை த்ரிஷா, தனது X தள பக்கத்தில் அந்த வக்கீல் நோட்டீஸை பதிவிட்டுள்ளார். 



இந்த பதிவில், அவர் தன்னை குறித்து ஏ.வி.ராஜு பேசிய வீடியோ மற்றும் செய்திகளின் இணைப்புகளை இணைத்திருக்கிறார். அந்த நோட்டீஸில், த்ரிஷா மான நஷ்ட ஈடு கேட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எவ்வளவு கேட்டுள்ளார் என்பது குறித்த தகவல் அதில் சென்சார் செய்யப்பட்டிருக்கிறது. 


வக்கீல் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளவை என்ன?


ஏ.வி.ராஜுவின் பேச்சால், த்ரிஷா 4 நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், இதனால் குறிப்பிட்ட தொகையை அவருக்கு கொடுக்க வேண்டும் என அந்த வக்கீல் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் உட்பட அனைத்திலும் எந்த வகையிலும் த்ரிஷாவிற்கு எதிராக வேறு எந்த அவதூறான வெளியிடுவதை / வழங்குவதை / வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 


அவரது சொந்த செலவில், அச்சு, மின்னணு, சமூக வலைதளங்கள் உள்ளிட்ட இடங்களில் த்ரிஷா குறித்து அவர் பேசியுள்ள, வெளியிட்டுள்ள அவதூறான அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் அனைத்து பதிவுகளையும் உடனடியாக நீக்க / அகற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த அறிவிப்பை பெற்ற 24 மணி நேரத்திற்குள் த்ரிஷாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதுடன், 5க்கு மேல் புழக்கத்தில் உள்ள புகழ்பெற்ற தேசிய ஆங்கில நாளிதழ் மற்றும் புகழ்பெற்ற, 5 லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்கப்படும் தமிழ் நாளிதழ் ஆகியவற்றில் மன்னிப்பை வெளியிட வேண்டும் எனவும் ஏ.வி.ராஜூவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், யூடியூப் உள்ளிட்ட மின்னணு ஊடகங்களின் வாயிலாக மன்னிப்பை வெளியிட வேண்டும் என்றும் அந்த வக்கீல் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | த்ரிஷா இதுவரை சந்தித்த சர்ச்சைகள்! அதுக்குன்னு இவ்வளவா...


மன்னிப்பு கேட்ட ஏ.வி.ராஜு:


முன்னாள் அதிமுக உறுப்பினரான ஏ.வி.ராஜுவுக்கு கண்டனம் தெரிவித்து, நடிகை த்ரிஷா 2 நாட்களுக்கு முன்னர் கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தார். அப்போதே, ஏ.வி.ராஜு தான் ”த்ரிஷா போன்ற பெண்” என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டதாகவும், தன்னை அவமானப்படுத்தும் நோக்கில் இது போல யாரோ சித்தரித்து வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் கூறி, ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டிருந்தார். மேலும், இதனால் த்ரிஷாவின் மனம் புண்பட்டிருந்தால் தன்னை மன்னித்து விடுமாறும் அவர் கூறியிருந்தார். 


கூவத்தூரில் கூத்து..த்ரிஷாவுக்கு 25 லட்சம்..ஏ.வீ.ராஜு பேசியது என்ன?


ஏ.வி.ராஜு, உட்கட்சி பூசல் காரணமாக சில நாட்களுக்கு முன்பு அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதுதான் அவர் த்ரிஷா குறித்து பேசினார். கூவத்தூரில் இருந்த போது, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், தனக்கு த்ரிஷாதான் வேண்டும் என்று கூறியதாகவும், அதற்காக த்ரிஷாவிற்கு 25 லட்சம் கொடுத்து அவர் அழைத்து வரப்பட்டதாகவும் இதற்கு நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ்தான் உதவியதாகவும் கூறினார். இந்த சம்பவம்தான் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இது குறித்து தான் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாக த்ரிஷா கூறியிருந்த நிலையில், தற்போது அதற்கான பணியில் இறங்கிவிட்டார். 


மேலும் படிக்க | கூவத்தூருக்கும் த்ரிஷாவுக்கும் என்ன சம்பந்தம்? அது என்ன 25 லட்சம்? முழு விவரம் இங்கே..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ