பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு எதிரான ஒரு அரசு என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, 2036-ஆம் ஆண்டுதான் நடைமுறைப்படுத்த முடியும் என்று அறிவித்த பெண்களுக்கு எதிரான அரசு பாஜக அரசு என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டினார். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 'பொய் கணக்கு காட்டும் பாஜக... எங்கள் காதுகள் பாவமில்லையா' - லிஸ்ட் போட்டு காட்டிய ஸ்டாலின்!


கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் நாகை மாலி எம்எல்ஏ, திமுக மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ, காங்கிரஸ் மாவட்ட தலைவர் எஸ்.ராஜகுமார் எம்எல்ஏ ஆகியோர் வேட்பாளரை ஆதரித்து பேசினர். கூட்டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது: உள்ளாட்சிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு பெற்று பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர். ஆனால் மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு செய்யும் தீர்மானம் கொண்டு வந்தபோது அதனை நிறைவேற்றிவிட்டு, 2036-ஆம் ஆண்டுதான் அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்று அறிவித்த பெண்களுக்கு எதிரான அரசு பாஜக அரசு. 


பாமக எந்த கொள்கையின் அடிப்படையில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர் என்பது தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக கூறும் அதிமுகவினர் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என்று எண்ணுகின்றனர். அதற்கு சில சிறுபான்மையினர் அணியினரும் துணை போகின்றனர். சிறுபான்மை மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக எம்.பி.க்கள் எதிர்த்திருந்தால் அப்போது அதனை நடைமுறைப்படுத்தி இருக்க முடியாது. அதைவிடுத்து, தற்போது கூட்டணியைவிட்டு வெளியேறி விட்டோம் என்று கூறுகின்றனர். 


ஜெயலலிதா மறைவுக்குப்பின் இபிஎஸ், ஒபிஎஸ் ஆகியோர் மோடிக்கு காவடித்தூக்கி 4 ஆண்டுகள் ஆட்சியை தக்கவைத்தனர். தற்போது டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டனர். அதேபோல் பாஜக தீபத்தில் அதிமுக விரைவில் கலக்க போகிறது. அதிமுக தொண்டர்களை பழனிச்சாமி ஏமாற்றி வருகிறார். வலுவான கூட்டணியை அமைக்கக் கூட அதிமுகவால் முடியவில்லை. இந்த தேர்தலில் அதிமுக, பாமகவுக்கு அளிக்கும் வாக்குகள் அனைத்தும் பாஜகவுக்கே போகும். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இக்கூட்டணி வெற்றி பெற்றதும் அரைமணி நேரத்தில் முடிவு செய்து அறிவிப்போம் என்றார்.


மேலும் படிக்க | அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு அதிகம், வரலாற்றை தெரிஞ்சுக்க தம்பி - ஜெயக்குமார் விளாசல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ