அரசியலுக்கு வந்ததற்கான காரணம் என்ன? தங்கர் பச்சான் பேட்டி!
கடலூர் மாவட்டத்தை காப்பாற்றுவதற்காகவே அரசியலில் ஈடுபட்டு உள்ளேன்- பாமக வேட்பாளரும், இயக்குனருமான தங்கர்பச்சான் வேட்பு மனு தாக்களுக்கு பிறகு பேட்டி.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தங்கர்பச்சான் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் அருண் தம்புராஜ் அவர்களிடம் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது கூட்டணி கட்சிகளான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்கள் உடன் இருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த இயக்குனரும் வேட்பாளருமான தங்கர் பச்சான் கூறுகையில் உறுதியாக வெற்றி வாய்ப்பு எங்களது கூட்டணிக்கு தான் என்று குறித்து வைத்துக் கொள்ளுங்கள் கூறிய அவர், எனக்கு தெரிந்தவற்றை எல்லாம் கதையாக எடுக்க மாட்டேன் சமூகத்திற்கு தேவை கதை என்றுதான் உருவாக்குவேன் அது போல தான் எனது அரசியல் வரவு என்பதும் இந்த கடலூர் மாவட்டத்திற்கு உடனடி தேவை என்பதை உணர்கிறேன். கடலூர் மாவட்டம் நான் சிறுவயதில் பார்த்த போலவே இருக்கிறது, 20க்கும் மேற்பட்ட தேர்தல்களை சந்தித்த இந்த கடலூர் எந்த மாற்றத்தையும் அடையவில்லை, விவசாய வாழ்வாதார நிலையை சரி செய்யவும், என்எல்சி நிலக்கரி சுரங்கத்தால் விளைநிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளதால் தான் இந்த தேர்தலை சந்திக்கிறேன். என்று அவர் தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் 2024:
மக்களவை தேர்தல் 2024, வரும் ஏப்ரல் மாதம்19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதையடுத்து, தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களின் பட்டியலை முன்னரே அறிவித்திருந்தது. இதையடுத்து, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக யார் யார் போட்டியிடுகின்றனர் என்பது குறித்து விவரமும் வெளியாகியிருந்தது.
இதில், தங்கர் பச்சான் கடலூர் தொகுதியில் போட்டியடவுள்ளார் என்ற தகவலை பார்த்ததுமே மக்கள் கொஞ்சம் அதிர்ந்துதான் போயினர். பலர் ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் தங்கர் பச்சானை விமர்சனம் செய்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி, குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களை வைத்து அரசியல் செய்வதாக மக்களிடையே ஒரு கருத்து உள்ளது. எனவே, அவர்கள் தங்களின் வேட்பாளர்களையும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக தேர்ந்தெடுத்து தேர்தலில் களமிறக்குவதாகவும் ஒரு கருத்து இருக்கிறது. இதுவரை, எந்தவித சாதிய கொள்கைகளுக்காகவும் நிற்காத தங்கர் பச்சான், பாமக கட்சியில் வேட்பாளராக களமிறங்கியிருப்பதுதான் இந்த விமர்சனத்திற்கு தற்போது காரணமாகியுள்ளது.
மேலும் படிக்க | சின்னம் பார்த்து வாக்களிக்காதீர்கள் - பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேண்டுகோள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ