கடலூர்: கடலூரில் வருவாய்த்துறை அலுவலர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இதனால், கடலூர் மாவட்டம் முழுவதும் வருவாய் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளுக்காக மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதற்கான அறிவிப்பு வெளியானது.
அதன்பபடி வருவாய்த்துறை அலுவலர்களின் பணியிறக்கம், பெயர் மாற்றம் விதி திருத்தம் மற்றும் அலுவலக உதவியாளர் காலிபணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடந்து வருகின்றது.
இந்த போராட்டம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாட்சியர் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
கடலூர் மாவட்டத்தில், கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட 10 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் முதற்கட்ட போராட்டமான ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை அலுவர்களின் பணியிறக்கம், பெயர் மாற்றம் விதி திருத்தம் மற்றும் அலுவலக உதவியாளர் காலிபணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டங்கள் நடக்கின்றன.
மேலும் படிக்க | சென்னை மழை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வைத்த குற்றசாட்டு!
மேலும் கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள், ஊழியர்கள் என 300 அக்கு மேற்பட்டடோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்டடு வருகின்றனர்.
மேலும் படிக்க | சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் எப்போது நடைபெறும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ