ED Raid At Durai Murugan House : வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் திமுக பொதுச்செயலாளரும், மாநில நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வீடு மற்றும் பொறியியல் கல்லூரியில் அவனுக்குத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோன்று திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவரது வீடு ,அவருக்கு சொந்தமான சிமெண்ட் குடோன் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று காலை முதல் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் CRPF பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.


இதில் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் 12 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று இரவு 9 மணி அளவில் முடிந்தது.இதில் முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறையினர் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


சிக்கிய ஆவணங்கள்..


அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்திற்கு சொந்தமான வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் தொடர்ந்து  சோதனை நடைபெற்றது.


இதில் பொறியியல் கல்லூரியில் இருந்து கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் காட்பாடியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வீட்டில்  சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை


இரவு 2 மணி அளவில் நிறைவடைந்தது.  இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அவரது வீட்டில் மேல் மாடியில் உள்ள அறைக்கு சாவி இல்லாத காரணத்தினால் இரண்டு கதவுகளை உடைத்து அமலாக்க துறையினர் சோதனை செய்தனர்.


அமலாக்கத் துறையினர் சோதனை செய்த போது அவருடன் உடன் இருந்த வேலூர் துணை மேயர் சுனில் குமார், செய்தியாளர்களிடம் கூறும் பொழுது,
அமலாக்க துறையினர் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் அது குறித்த விவரங்களை தங்களுக்கு எழுதிக் கொடுத்து இருப்பதாகவும் அவர் கூறினார்.


கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். வருமான வரித்துறை நடத்திய இந்த சோதனையில் 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடு, பூஞ்சோலை சீனிவாசன் சிமெண்ட் கிடங்குகளில் சோதனை நடத்தி 11.55 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.  இது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | அமலாக்கத்துறை சோதனை: ஆதவ் அர்ஜூனா விளக்கம்


மேலும் படிக்க | தமிழகத்தில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ