Latest News Forest Fire In Western Ghats : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில்  நேற்று முன்தினம் தேவதானப்பட்டி வனச்சரக பகுதிகளான மஞ்சளார் வனப்பகுதி, முருகமலை வனப்பகுதி, செலும்பு வனப்பகுதி, கும்பக்கரை வனப்பகுதி, சோத்துப்பாறை  வனப்பகுதி, உள்ளிட்ட ஏழு இடங்களில் காட்டித் தீ பற்றி எரிய துவங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் வனத்துறையினர் மற்றும் தீ தடுப்பு காவலர்கள் 50க்கும் மேற்பட்டோர்  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில்  நேற்று மாலை வரை 6 இடங்களில் எரிந்து வந்த காட்டுத்தீ  முற்றிலும் அனைத்து கட்டுப்படுத்தப்பட்ட  நிலையில் செழும்பு வனப்பகுதியில்  மற்றும் காட்டுத் தீ மூன்றாவது நாளாக எரிந்து வருகிறது.


மேலும் படிக்க | கச்சத்தீவு விவகாரம்: ’அந்தர் பல்டி அடிக்காதீங்க ஜெய்சங்கர்’ சிதம்பரம் காட்டமான விமர்சனம்!


இந்த வனப்பகுதி மிகவும் உயரமான மலைப் பகுதி என்பதால் வணக்காவளர்கள் மற்றும் தீத்தடுப்பு காவலர்கள் விரைந்து காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாத சூழல் உள்ளது. மேலும் தொடர்ந்து காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் பணியாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் காட்டு தீ குறித்து தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறை அதிகாரி கூறுகையில்  ஒரே நாளில் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பற்றியதால் காட்டுத்தியை கட்டுப்படுத்த பெரும் சவால் ஏற்பட்டதாகவும்,  தற்பொழுது செலும்பு வனப்பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் இன்று இரவுக்குள் காட்டுத் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | போதைப்பொருள் வழக்கில் வந்த சம்மன்! இயக்குநர் அமீர் கொடுத்த ரிப்ளை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ