காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவில் வையாவூர் ஊராட்சி அமைந்துள்ளது.இவ்வூராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் வையாவூர் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாகவே பலருக்கும் தொடர் வயிற்றுபோக்கு மற்றும் வாந்தி ஏறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவமனையில் அனுமதி:


கடந்த 11-ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையிலும்,அதே போன்று அங்காங்கே உள்ள அரசு மருத்துவமனைகளிலும்,தனியார் மருத்துவமனைகளிலுமே உடல் உபாதைகள் ஏற்பட்டு சகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிககப்படுகின்றனர்.


அந்த வகையில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் தற்போது இரண்டு ஆண் மற்றும் மூன்று பெண்கள் என மொத்தம் ஐந்து பேர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சங்கர மருத்துவமனை, ஐயம்பேட்டையிலுள்ள மருத்துவமனை,சவிதா அதே போன்று மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்டவற்றில் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு உடல் உபாதைகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


இருவர் உயிரிழப்பு:


இந்த கிராமத்தை சேர்ந்த எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த அஸ்வினி என்கிற 75வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வாந்தி மற்றும் வயிற்று போக்கின் காரணமாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் கடந்த புதன்கிழமை ( மாலை உயிரிழந்திருக்கிறார்.அதே போல் அதே கிராம் அதே தெருவை சேர்ந்த சரோஜா (80வயது)என்கிற மூதாட்டிக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இருந்ததாகவும் ஆனால் எவ்வித சிகிச்சையும் பெறாமல் வீட்டிலேயே இருந்துவந்த நிலையில் வியாழக்கிழமையான நேற்று மாலை உயிரிழந்திருக்கிறார்.


இந்த உயிரிழந்த இருவரின் சடங்கு வீட்டிற்கு அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் சென்றிருந்த நிலையில் பலருக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு இருப்பதும், இதனால் தான் இவர்கள் உயிரிழந்தார்கள் என எண்ணி அவ்வூரில் வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு உள்ளவர்கள் மேலும் கலக்கத்தில் இருந்து வருவதோடு பெருத்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.


ஒரே கிராமத்தை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரச்சனைக்கான காரணம் குடிநீரா எனும் சந்தேகம் எழுவதாக கூறும் அப்பகுதி மக்கள் உடனடியாக அக்குடிநீரை ஆய்வுக்கு உட்படுத்துவதோடு சுகாதாரத்துறையினர் தங்களது பகுதியில் மருத்துவ முகாம் நடத்திட வேண்டுமெனவும் தங்களது கோரிக்கையை‌ முன்வைக்கின்றனர்.


மேலும் படிக்க | குல்பி ஐஸ் சாப்பிட்ட 94 பேருக்கு வாந்தி, மயக்கம்


மாவட்ட ஆட்சியர் விளக்கம்:


இரு மூதாட்டிகளின் உயிரிழப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் விளக்கமளிக்கையில், இந்த இரு மூதாட்டிகளில் 75வயது மதிக்கதக்க மூதாடி அஷ்வினி பல வருடங்களாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,சரோஜா என்ற 80வயது மூதாட்டி பல மாதங்களாக கூட்டு நோய்கள் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு பல மாதாங்களாக வீட்டுல்  படுத்தப்படிக்கையாக இருந்ததாகவும்,அவர்  பொது சுகாதாரத் துறையின் நோய்த்தடுப்பு சிகிச்சையின் கீழ் இருந்தாகவும், இந்த இருவரும் முதுமை மற்றும் இணை நோயினால் தான் இறந்துள்ளதாகவும், டயஹ்ரியா காரணமாக இவர்கள்  மரணம் அடையவில்லை (Both died due to senility & co morbidity....Death was not due to diahhrea.) என விளக்கமளித்துள்ளார்.


இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக,வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த வையாவூர் ஊராட்சியில் விநியோகிக்கும் குடிநீரில் குளோரினேற்றம் செய்வதை கண்காணிக்காமல், மேற்படி ஊராட்சி பொதுமக்களுக்கு வாந்தி பேதி நோய் பரவிட காரணமாக இருந்ததால், வையாவூர் ஊராட்சி செயலாளராக பணிபுரியும் கே.பாஸ்கர் என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்து வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் த.கண்ணன் (கிராம ஊராட்சிகள்) உத்தரவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | திருமண நிகழ்வில் உணவு உண்ட 500 பேருக்கு வாந்தி மயக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ