தமிழகத்தில் ஊடுருவ பார்க்கும் ஆர்எஸ்எஸ்? ஆர்எஸ் பாரதி குற்றச்சாட்டு!
இருமொழி கொள்கையை படித்ததால் தான் வெளிநாடுகளில் தமிழர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வளவு ஆண்டுகளாக வெற்றிகரமாக இருக்க கூடிய இந்த இருமொழி கொள்கையை ஏன் கெடுக்கப் பார்க்கிறார்? - ஆர்.எஸ். பாரதி.
ஆர்.எஸ்.எஸ். மெல்ல மெல்ல தமிழகத்தில் ஊடுருவ பார்க்கிறார்கள். இது பெரியார், கலைஞர் ஆகியோரால் பக்குவப்படுத்தப்பட்ட மண். ஆர்எஸ்எஸ் சின் எந்த முயற்சியும் தமிழகத்தில் எடுபடாது என நாகர்கோவிலில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த திமுக கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மொழி கொள்கை பற்றி புரியாமல் மக்களை குழப்புவதற்காக இப்படி கூறுகிறார்கள். தமிழகத்தில் 57 ஆண்டுகளாகவே இருமொழி கொள்கையை தான் பின்பற்றி வருகிறோம்.
மேலும் படிக்க | ராமநாதபுர மாவட்ட காவல்துறை மீது செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு
இருமொழி கொள்கையை படித்ததால் தான் வெளிநாடுகளில் தமிழர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வளவு ஆண்டுகளாக வெற்றிகரமாக இருக்க கூடிய இந்த இருமொழி கொள்கையை ஏன் கெடுக்கப் பார்க்கிறார்? தமிழர்கள் மீது அவர்களுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. தமிழ்நாடு கல்வியில் முன்னேறி இருக்கும் பொறாமை காரணமாக தான் இந்த மும்மொழி கொள்கையை புகுத்தி கெடுக்க நினைக்கிறார்கள். மேலும் இந்தியை திணிக்க பார்த்தது காங்கிரசா அல்லது பா.ஜனதாவா என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை எக்ஸ் தளத்தில் டிவிட் செய்துள்ளார் என செய்தியாளர்கள் கேள்வி கேட்டதிற்கு அண்ணாமலை தமிழ்நாட்டு அரசியலில் தற்போது இல்லை. எனவே அவரை பற்றி பேச வேண்டாம் எனவும் ஆர்.எஸ்.எஸ். மெல்ல மெல்ல தமிழகத்தில் ஊடுருவ பார்க்கிறார்கள்.
இது பெரியார், கலைஞர் ஆகியோரால் பக்குவப்படுத்தப்பட்ட மண். எனவே ஆர்.எஸ்.எஸ் இன் எந்த முயற்சியும் தமிழகத்தில் எடுபடாது. தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்று கேட்கிறீர்கள். இது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து ஒரு வாரத்தில் தெரிய வரும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் ஆவாரா என்பது பற்றியும் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணம் முடிந்து வந்தவுடன் கூறுவார் என தெரிவித்தார்.மேலும் குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பு தீர்மானமாக உதயநிதி ஸ்டாலின் மிக விரைவில் துணை முதலமைச்சர் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் நாகர்கோவில் மேயர் மகேஷ் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மும்மொழிக் கொள்கையை திணிக்க கூடாது - அன்புமணி ராமதாஸ்
மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிக்க கூடாது என கூறிய அவர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்துவம் உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொள்கை முடிவு எடுப்பதற்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்தார். இந்திரா காந்தி Emergency Period யில் கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு எடுத்து சென்றதால் தான் இந்த பிரச்சனையே வந்தது என கூறினார். கல்வி என்பது மீண்டும் மாநில பட்டியலில் வரவேண்டும் எனவும், அப்படி வந்தால் ஒவ்வொரு மாநிலமும் அதற்கான கொள்கையின் அடிப்படையில் முடிவெடுப்பார்கள் என தெரிவித்தார். மேலும் மத்திய அரசு கல்விக் கொள்கையை திணிக்க கூடாது, ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதியை தர மாட்டோம் என்றும் கூறக்கூடாது என கூறினார்.
மேலும் படிக்க | மதுவால் பல விஷயங்களில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: அன்புமணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ