Today Weather Report Tamil Nadu : ஒரு வாரத்திற்கு முன்பு வரை வெப்பம் தாங்க முடியாமல் மக்கள் அல்லல்பட்டு வந்தனர். ஆனால், இந்த வாரம் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த நிலையில், இன்றைய வானிலை மாற்றங்களையும், எந்தெந்த மாநிலங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என்பதையும் இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வானிலை ஆய்வு மையம் தகவல்:


வளிமண்டன கீழடுக்கு சுழற்சி காரணமாக, வரும் மே 21ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 


தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமாழைக்கு வாய்ப்பிருப்பதாக் தெரிவிக்கப்பட்டு, இவற்றிற்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களை தவிர, இதனை சுற்றியுள்ள மாவட்டங்களீலும் கனமழை பெய்யும் என் அ சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. 


சுட்டெரித்த கோடை வெயில்..குளிர்வித்த குளு குளு மழை!


எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக இருந்தது. மக்கள் வெயிலில் வாடி வதங்கி வந்த நிலையில் தற்போது தமிழகத்தின் பெருமாபாலான இடங்களி கோடை மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியிருக்கும் மாவட்டங்களான நீலகிரி, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் மிதமான மழையும் பெய்து வருகிறது. அது மட்டுமண்ட்ரி தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், சுட்டெரித்த கோடை வெயிலில் இருந்து தப்பித்த மக்கள், இப்போது குளு குளு மழையால் கொஞ்சம் நிம்மதி அடைந்திருக்கின்றனர். 


மேலும் படிக்க | குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை


கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:


இன்றைய வானிலை நிலவரப்படி, கன்னியாகுமரி, திண்டுகல், விருதுநகர், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கன உழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதே போல ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.


நாளை (மே 20) திருச்சி மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகள், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுரை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையின் நிலை என்ன?


தமிழகத்தின் முக்கிய நகரான சென்னையில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வெப்பம் சுமார் 31.6 டிகிரி செல்சியஸாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க | மழை காரணமாக குன்னூர் ரயில் சேவை பாதிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ