TVK Leader Actor Vijay Students Meet : தமிழ் திரையுலகின் டாப் நடிகராக விளங்கும் நடிகர் விஜய், சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதற்கு பிறகு சமூக பிரச்சனைகளிலும், மக்களின் நலன்களிலும் அதிக கவனம் செலுத்தி வரும் விஜய், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இந்த நிலையில், அவர் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்ற மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாணவ-மாணவிகளை சந்தித்த விஜய்:


கடந்த ஆண்டு, பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளை சந்தித்தார் நடிகர் விஜய். இந்த சந்திப்பு விழாவில் மாணவர்களை சந்தித்த அவர், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமன்றி பரிசளித்து பாராட்டினார். இதே போல, இந்த ஆண்டும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழா, சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடக்கிறது. கடந்த ஆண்டு நடைப்பெற்ற பாராட்டு விழாவின் போது, அதிகம் பேர் இருந்ததால் காலையில் தொடங்கி, இரவு வரை நடைப்பெற்றது. இந்த ஆண்டு அதை தவிர்ப்பதற்காக இரண்டு நாட்களாக இவ்விழாவை பிரித்திருக்கின்றனர். 


ஜூன் 28ஆம் தேதியான இன்று நடைப்பெற்று வரும் விழாவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களி பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து அவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 


9 மாணவர்களுக்கு வைர ஆபரணங்கள் பரிசு:


முதல் கட்டமாக இன்று நடைப்பெற்று வரும் விழாவில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் குறிப்பிடும் வகையில் 9 மாணவர்களுக்கு மட்டும் வைர மோதிரம் மற்றும் வைர கம்மலை பரிசாக வழங்கினார் நடிகர் விஜய்.


மேலும் படிக்க | 2026 தேர்தல் கூட்டணிக்கு தயராகிறாரா விஜய்... அவர் குறிப்பிடும் சில கட்சிகள் எது..!!


அவர்கள்  யார் தெரியுமா?


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 3 இடங்களை பிடித்த மாணவிகள் பிரதிக்‌ஷா (சென்னை), மகாலட்சுமி (திருப்பூர்), தோஷிதா லட்சுமி (செங்கல்பட்டு) ஆகியோருக்கு விஜய் வைர கம்மலை பரிசாக வழங்கினார். 


அதே போல, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் 6 இடங்களை பெற்ற தேவதர்ஷினி, சந்தியா (தருமபுரி), காவியாஸ்ரீ (திண்டுக்க்கல்), கோபிகா (ஈரோடு), காவியா ஜனனி (ராமநாதபுரம்), சஞ்சனா ஆயுஷ் (திருநெல்வேலி) ஆகியவர்களுக்குவைர மோதரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. 


நாங்குநேரி மாணவருக்கு உதவித்தொகை..


நாங்குநேரியில் கடந்த ஆண்டு சாதிய தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட 12ஆம் வகுப்பு மாணவர் சின்னதுரை, 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். அவருக்கு ரூ.5 ஆயிரத்தை ஊக்கத்தொகையாக வழங்கினார் நடிகர் விஜய். அடிப்பட்ட நிலையில் அந்த மாணவர் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | மாணவர்களுக்கு பாராட்டுவிழா... மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ