குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து சென்னை அருகே கரையை கடக்கும்
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை மையம், தொடர்ந்து நிலைமையை கண்காணித்து முன்னெச்சரிக்கைகளை வெளியிட்டுவருகிறது.
சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை மையம், தொடர்ந்து நிலைமையை கண்காணித்து முன்னெச்சரிக்கைகளை வெளியிட்டுவருகிறது.
தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கடலூரை ஒட்டி கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் - ஸ்ரீஹரிகோட்டா இடையே சென்னை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
எனவே, இன்று இரவு முதல் நாளை மாலை வரை அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் அதி கனமழை பெய்யக்கூடும்.
READ ALSO | தமிழகத்தில் தொடரும் கனமழை: வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி,வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ( வியாழக்கிழமை, 11.11.2021) சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும், காஞ்சிபுரம், விழுப்புரம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வீட்டில் ஆதார், ரேஷன், கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும் என்று தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ALSO READ:RAIN ALERT! இனி ஹெலிகாப்டரில் வெள்ள மீட்புப் பணி - அமைச்சர் அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR