RAIN ALERT! இனி ஹெலிகாப்டரில் வெள்ள மீட்புப் பணி - அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களை தங்கவைப்பதற்காக 5 ஆயிரத்து 106 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 8, 2021, 03:57 PM IST
  • 32 மாவட்டங்களில் சராசரியாக 60 5.7 மில்லி மீட்டர் அளவுக்கு மழை.
  • சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 889 பேர் 40 முகாம்களில் தங்க வைப்பு.
  • 75 இடங்களில் விழுந்திருந்த மரங்களில் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டது.
RAIN ALERT! இனி ஹெலிகாப்டரில் வெள்ள மீட்புப் பணி - அமைச்சர் அறிவிப்பு

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் முழங்கால் மற்றும் இடுப்பளவு மழைநீர் தேங்கியது. வீடுகளிலும் நீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில் பருவமழை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் (K. K. S. S. R. Ramachandran) செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்பொழுது அவர், கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் சராசரியாக 60 5.7 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது சென்னையில் மட்டும் 79.13 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகி உள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் கடந்த 1 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை வழக்கத்தை விட 44% அதிகமாக மழை பொழிந்து உள்ளதாகவும். கடலூர் கரூர் விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வழக்கத்தை விட 60 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 889 அவர்கள் 40 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

ALSO READ |  இப்படி யாரும் செய்ய வேண்டாம்.. அலட்சியத்தால் போன உயிர்!

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களை தங்கவைப்பதற்காக 5 ஆயிரத்து 106 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இதுவரை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 451 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 10 சுரங்கப் பாதைகளில் மழைநீர் மொத்தமாக வெளியேற்றப்பட்ட விட்டது. 75 இடங்களில் விழுந்திருந்த மரங்களில் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டு விட்டது. 

கடந்த 24 மணி நேரத்தில் மழைக்கு நான்கு பேர் மற்றும் 16 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் 263 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்

பேரிடர் மீட்புக் குழு மற்றும் தீயணைப்புத் துறை தயாராக வைக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை மேற்கொள்ள 2,115 ஜெனரேட்டர்கள், 483 பம்புகள் மற்றும் 3 ஆயிரத்து 915 மின்சார மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. 

வெள்ளத்தில் அடித்துச் செல்பவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க தமிழகத்தில் மொத்தம் 87 இடங்களில் ஹெலிபேட் உள்ளது. அவை அனைத்தும் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ALSO READ |  வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த நிறைமாத கர்ப்பிணி மீட்பு!

மழை பொழியும் அளவை கணக்கிடப்பட்டு ஏரிகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது தொடர்ந்து இதே முறைதான் கடைபிடிக்கப்படும். நாளைக்குள் அனைத்து மீனவர்களும் கரை திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மறுபுறம் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 11 ஆம் தேதி வட தமிழக கடற்கரையை நெருங்க உள்ளது. நாளை மறுநாள் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவ மக்கள் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் எனவும், உதவு தேவைப்பட்டால், உடனடியாக உதவி எண்களை தொடர்ப்புக்கொள்ள வேண்டும் எனவும் அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. 

ALSO READ |  சென்னையில் கனமழை: முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News