சென்னையில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த பேசினார். அப்போது மதுவிலக்கை ஏன் முழுமைகயா அமல்படுத்துவில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கு அமல்படுத்த வில்லை என பாடல் ஆசிரியர் வைரமுத்து கேள்வி எழுப்பி இருந்தார். வைரமுத்துவின் கேள்வியை குறிப்பிட்டு செய்தியாளர்கள் எழுப்பிய இன்றைய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்., "வைரமுத்து நெருக்கமாக இருக்கும் திமுக தான் மதுவைக் கொண்டு வந்தது. அப்போது  ராஜாஜி எவ்வளவோ சொல்லியும் மதுவிலக்கை அமல்படுத்தாமல் திமுக தான் மதுவைக் கொண்டு வந்தது. 1998 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் கள்ளச் சாராயம் ஆறாகப் பெருகி ஓடியது. திமுக-வுடன் நெருக்கமாக இருக்கும் வைரமுத்து ஏன் இதுகுறித்து திமுக-விடம் கேட்கவில்லை என கேள்வி எழுப்பினார்.


தொடரந்து பேசிய அவர்... மதுவிலக்கை ஒரே நாளில் அமல்படுத்தலாம். ஆனால், அதன் விளைவு என்ன என்பதைப் பார்க்க வேண்டும். ஜெயலலிதா அவர்கள் முதலில் 500 மதுக்கடைகளையும், தற்போதைய முதல்வர் பழனிசாமி 500 மதுக்கடைகளையும் படிப்படியாக மூடியுள்ளனர். 


மது இல்லாத சமூகமாக தமிழகம் இருக்க வேண்டும் என்பதே அதிமுக அரசின் கொள்கை. ஆனால், அதை ஒரே நாளில் செயல்படுத்துவுது என்பது முடியாத காரியம்.  மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப்போல் மது அருந்துபவர்கள் தாங்களே திருந்த வேண்டும்" என குறிப்பிட்டு பேசினார்.


இதனையடுத்து கோடநாடு விவகாரம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "யார் இந்தப் பிரச்சாரத்தை செய்தனரோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், எங்களுக்கு மடியில் கனம் இல்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அதனால், உடனடியாக தேர்தல் வருவதற்கு முயற்சி செய்கிறார். மக்களைத் திசை திருப்ப முடியாது.


குறிப்பிட்ட இந்த ஆவணப்படத்தில் இறந்தவர்கள் முன்பு சொல்லியதை எப்படி இப்போது நம்புவது? இறந்தவர் மீண்டும் வந்து சாட்சி சொல்ல இயலுமா? இது புனையப்பட்ட குற்றச்சாட்டு. நிச்சயமாக சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்வோம்" என தெரிவித்துள்ளார்.