முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு நடத்த மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் 7 நிபந்தனைகளுடன் கேரள அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. அதில் ஒன்றாக தமிழக அரசின் ஒப்புதலை பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.


மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அந்த ஆய்வு அறிக்கை தமிழகத்தில் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது. வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகிவருகின்றது.



இந்நிலையில் முல்லைப்பெரியாறு புதிய அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் முல்லைப்பெரியாறில் புதிய அணைக்கட்டுவது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. எனவே, பிரதமர் உடனடியாக தலையிட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்த ஆய்வுக்கான அனுமதியை திரும்பப்பெற வலியுறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.