தென் தமிழகத்தின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
கடலோர பகுதிகளான தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர பகுதிகளான தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும். அதேபோல வட தமிழகம் மற்றும் புதுசேரியில் வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதுக்குறித்து கூறியாதவது:
தென் மேற்கு வங்கக்கடல், அதனையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதன் காரணமாக தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் வட தமிழகம் மற்றும் புதுச்வையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும்.
நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் அடுத்த 2 இரவுகள் உறை பனி தொடரும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் அல்லது வறண்ட வானிலை காணப்படும்.
அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்சம் வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சம் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.