தமிழ் நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்தல் நேரம் நீட்டிக்க வாய்ப்பு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் இன்னும் பல மாவட்டங்களில் மழை பெய்வதால் வாக்குப் பதிவு பாதிப்படைந்துள்ளது.  இம்முறை வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டன. 2011-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் 78.01 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மழை பெய்து வருவதால் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் குறையுமா? அதிகரிக்குமா? என்று பொருத்திருந்து பார்போம்.


தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. வாக்கு பதிவு 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே மக்கள் நீண்ட வரிசைகளில் வாக்குச் சாவடிக்கு வெளியே நின்டிருந்தனர்.


தமிழ்நாட்டில் மொத்தம் 233 தொகுதிகள், அதில் 231 தொகுதிகளிலும் மற்றும் இரண்டு தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட 3700க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன.